இஸ்ரேல், பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட சில நாடுகள் அமைதி ஒப்பந்தங்கள், போர்நிறுத்தங்களை கொண்டு வந்ததற்காக டிரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளன. இது குறித்து டொனால்ட் டிரம்ப், "வெள்ளை மாளிகையில் தனது நான்கு முன்னோடிகளுக்கு வழங்கப்பட்ட நோர்வே வழங்கிய மரியாதைக்கு தான் தகுதியானவன்" என்று கூறியுள்ளார்.
நார்வே செய்தித்தாளில், ‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப் நார்வேயின் நிதியமைச்சரை அழைத்து, அமைதிக்கான நோபல் பரிசை விரும்புவதாக நேரடியாக அழைப்பு வந்ததாகத் தெரிவித்துள்ளது. இது அங்கு தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. அப்போது ர் நோபல் பரிசு கேட்டு ட்ரம்ப் மிரட்டினார். அமெரிக்காவிற்கும், நார்வேக்கும் இடையே வரி, பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று டிரம்ப் விஷயத்தை மாற்றி அமைதிக்கான நோபல் பரிசுக்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். நார்வே அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது அவர் நோபல் பற்றி குறிப்பிடுவது இது முதல் முறை அல்ல’’ என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.