நீண்ட ஆண்டுகளாக நடந்த மோதல்களைத் தான் ஒரு நாளிலேயே முடித்ததாக டிரம்ப் மேலும் கூறினார். "இந்தியா, பாகிஸ்தானை நினைத்துப் பாருங்கள். பல ஆண்டுகளாக நடந்த போர்களை நினைத்துப் பாருங்கள். 31, 32, 37 ஆண்டுகளாக நடந்த போர்கள் உள்ளன. அவற்றில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நான் அதில் பெரும்பாலானவற்றை ஒரு நாளிலேயே முடித்துவிட்டேன்," என்றார்.
நோபல் பரிசு அறிவிப்பு 2024 ஆம் ஆண்டிற்கானது என்றும், தான் இந்தப் போர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தீர்வு கண்டதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். "நோபல் குழுவுக்கு நியாயம் செய்வதாக இருந்தால், அது 2024 ஆம் ஆண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், நான் இதை நோபல் பரிசுக்காகச் செய்யவில்லை. உயிர்களைக் காப்பாற்றுவதற்காகச் செய்தேன்," என்று அவர் வலியுறுத்தினார்.