Pakistan Airstrike : பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தான் பகுதி மீது நடத்திய தாக்குதலில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போர்ச்சூழல் நிலவுகிறது. இந்தத் தாக்குதலில் இளம் ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் பலியாகியிருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
26
பாக். தாக்குதலில் மூன்று ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மரணம்
எல்லையில் உள்ள பக்திகா மாகாணத்தில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஆப்கான் கிரிக்கெட் வீரர்களான கபீர், சிபத்துல்லா, ஹாரூன் ஆகியோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
36
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சீற்றம்
வீரர்கள் மரணத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த டி20 முத்தரப்பு தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) அறிவித்துள்ளது.
ஆப்கான் அணியை குறிவைத்து பாக். தாக்குதல் நடத்தியதா?
முழு கிரிக்கெட் அணியையும் குறிவைத்து பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தலிபான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
56
ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழல்
சமீபகாலமாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே பகைமை அதிகரித்துள்ளது. கந்தஹார் மாகாணத்தில் நடந்த தாக்குதல்களில் சுமார் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கூறுகிறது.
66
பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல்
பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறது. எல்லையில் உள்ள பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.