கனடா மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள், இரத்த வகை A சிறுநீரகத்தில் உள்ள ஆன்டிஜென்களை நீக்கி, அதை யாருக்கும் பொருந்தக்கூடிய "உலகளாவிய சிறுநீரகமாக" மாற்றியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பு ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பலரின் உயிரைக் காப்பாற்றும் அதிசய மருத்துவ முறையாக இருந்தாலும், இரத்த வகை பொருத்தமின்மை காரணமாக பல நோயாளிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் நீடிக்கிறது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், கனடா மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு புரட்சிகரமான முயற்சியில் வெற்றியை எட்டியுள்ளனர் – ஆய்வகத்தில் “உலகளாவிய சிறுநீரகம்” (Universal Kidney) உருவாக்கப்பட்டுள்ளது.
25
அனைவருக்கும் பொருந்தும்
இந்த தொழில்நுட்பம் மூலம், ஓ வகை (O type) இரத்தம் கொண்ட நோயாளிகள் மட்டும் அல்லாமல், அனைத்து இரத்த வகையினரும் எந்த நன்கொடையாளரிடமிருந்தும் சிறுநீரகத்தைப் பெறும் வாய்ப்பு உருவாகிறது. தற்போது, ஓ வகை நோயாளிகள் அதே வகை சிறுநீரகத்திற்காக வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது; இந்நிலையில் இந்த கண்டுபிடிப்பு வரலாற்றை மாற்றக்கூடியது.
35
எப்படி “உலகளாவிய சிறுநீரகம்” ஆனது?
ஆராய்ச்சியாளர்கள் வகை A இரத்த சிறுநீரகத்தில் காணப்படும் சர்க்கரை மூலக்கூறு ஆன்டிஜென்களை (A antigens) விசேஷ நொதிகள் (enzymes) மூலம் வெட்டி அகற்றியுள்ளனர். இதனால், அந்த சிறுநீரகம் வகை O மாதிரி ஆனது. இது காறின் சிவப்பு நிறத்தை அகற்றி, நடுநிலை நிறமாக மாற்றுவது போல் என்றார் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்டீபன் விதர்ஸ்.
மூளை இறந்த நோயாளியின் உடலில் இந்த மாற்றியமைக்கப்பட்ட சிறுநீரகம் சோதிக்கப்பட்டது. முதல் சில நாட்கள் சிறப்பாக செயல்பட்டது.மூன்றாம் நாளில் மீண்டும் சிறிய அளவில் வகை A ஆன்டிஜென்கள் தோன்றினாலும், நிராகரிப்பு அளவு மிகக் குறைவாக இருந்தது. இதுவே விஞ்ஞானிகளுக்கு இது மருத்துவ ரீதியாக சாத்தியமான மாற்று அறுவை சிகிச்சை பாதை என்பதை தெளிவாக்கியது.
55
ஏன் இது அவசியமானது?
அமெரிக்காவில் தினமும் 11 பேர் சிறுநீரகத்துக்காக காத்திருந்து உயிரிழக்கிறார்கள். பலர் O வகை சிறுநீரகத்திற்காக வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கண்டுபிடிப்பு, காத்திருப்பு நேரத்தை குறைக்கும் எல்லாருக்கும் பொருந்தும் சிறுநீரக வாய்ப்பை உருவாக்கும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றும்
எதிர்காலம் என்ன?
இன்னும் மனிதர்களில் முழுமையான சோதனைகள் தேவையானது. ஆனாலும், இந்த முடிவு மருத்துவ உலகில் ஒரு பெரும் வரலாற்று மாற்றத்தின் தெறிப்பாக பார்க்கப்படுகிறது. அடித்தள அறிவியல் நேரடியாக நோயாளி பராமரிப்பை தொடும் தருணம் இது.நிச்சயம் இது நாளைய மருத்துவத்தில், “உறுப்பு தானம் காத்திருப்பு” என்பதையே மாற்றி அமைக்கும்!