இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இலங்கை பொருளாதாரத்தை சீரழிவுக்குக் கொண்டு வந்த ராஜகபக்ச குடும்பத்தினர் அரசியலைவிட்டே ஒதுங்க வேண்டும் எனக் கோரி மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.
உணவுப் பொருட்கள், காய்கறிகள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் விலை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. 12 மணிநேரம் மின்வெட்டு, பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் தட்டுப்பாட்டால், மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தனர். இதன் உச்சகட்டமாக பாதுகாவலர்களின் தடைகளை மீறி ஆளுநர் மாளிகையை கைப்பற்றினர். பிரதமரின் தனி வீட்டிற்கு தீவைத்தனர்.
sri lanka
அடுத்ததாக நாட்டை வழிநடத்துவதற்காக இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் வாசிக்கப்பட்டு அதிபர் பதவி காலியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. அப்போது, அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வரும் 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
sri lanka crisis: கொழும்பில் தொடரும் பதற்றம்.. வேறு வழியில்லாமல் மீண்டும் ஊரடங்கு அமல்
இதனால், இலங்கை அதிபர் தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலம் வரும் 2024ம் ஆண்டு முடிவடைகிறது. அதுவரை புதிய அதிபர் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அடுத்த அதிபராக தேர்வாகும் நபர், இலங்கையின் புதிய பிரதமரை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.