இலங்கை அதிபர் மாளிகையில் ரகசிய அறை - வைரலாகும் புகைப்படங்கள்..!

First Published | Jul 10, 2022, 10:50 AM IST

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி சூழல் காரணமாக  ஏற்பட்டுள்ள போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக தொடர் போராட்டங்களில் அந்நாட்டு பொது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி நேற்று நடைபெற்ற போராட்டம் மிக தீவிரமாக மாறியது.

இதையும் படியுங்கள்: இலங்கை நெருக்கடி சூழல்... அதிபர் கோத்தய ராஜபக்சே ராஜினாமாவுக்கு பின் என்ன நடக்கும்?

போராட்டத்தின் அங்கமாக அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதன் காரணமாக அதிபர் மாளிகை முற்றிலும் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து இருக்கிறது. இது பற்றிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்: Sri Lanka : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ம் தேதி ராஜினாமா.. சபாநாயகர் தகவல் !

Tap to resize

இந்த நிலையில், அதிபர் மாளிகையின் உள்ளே பதுங்கு குழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பதுங்கு குழிக்குள் பல்வேறு அலமாறி கதவுகள் உள்ளன. இவற்றை கடந்து செல்லும் போது இரகசிய அறை ஒன்றும்  கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பதுங்கு குழியில் லிஃப்ட் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்: கொளுந்து விட்டு எரியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீடு.. போராட்டக்காரர்கள் தீ வைப்பு -வைரல் வீடியோ !

பதுங்கு குழியில் உள்ள இரகசிய அறை வலுவான இரும்பு கதவுகளை கொண்டு பூட்டப்பட்டு இருக்கிறது. இதனை திறக்க முடியாத அளவுக்கு உறுதியாக இந்த கதவுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திறக்கவே முடியாத நிலையில், இந்த அறையினுள் நிச்சயம் மிக முக்கிய அம்சங்கள் அல்லது விவரங்கள் அடங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 

Latest Videos

click me!