Rishi Sunak:
இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகலல்கள் வெளியாகி உள்ளன. எனவே, இந்த பதிவில் யார் இந்த ரிஷி சுனக் அவரின் குடும்ப பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Rishi Sunak:
இதற்காக ரிஷி சுனக் பிரதமர் வேட்பாளராக தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தனது பிரச்சாரத்தில் போது, சுனக் தனது இந்திய பாரம்பரியத்தை முன்நிறுத்தி பேசினார். அதில் அவர், இந்திய பாரம்பரியத்தையும், குடும்ப அமைப்பையும் அடிக்கோடிட்டுக்காட்டியதுடன் தனது குடும்பம் தனக்கு எல்லாமே என்று கூறினார்.
Rishi Sunak:
ஆப்ரிக்காவில் வசித்து வந்த, ரிஷியின் தாத்தாவும் பாட்டியும் பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள். அங்கு இந்தியர்களுக்கு எதிர்ப்பு கிளம்ப அங்கிருந்து, 1960 இல் பிரிட்டனுக்கு சென்று அங்கு தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தார்கள். சுனக்கின் தந்தை யாஷ்வீர் கென்யாவில் பிறந்து அங்கு வளர்ந்தார். ரிஷி சுனக்கின் தாய் உஷா தான்சானியாவில் பிறந்தார்.