உலகின் உயரமான கட்டிடத்தில் ஒளிரிய #save soil.. சத்குரு மண் காப்போம் இயக்கத்தின் அடுத்த சாதனை..

First Published | Jul 7, 2022, 5:53 PM IST

ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள ”மண் காப்போம்” எனும் இயக்கம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உலகின் மிக உயர கோபுரமான புர்ஜ்கலிபாவில் , #savesoil எனும் வாசகம் ஓளிரப்பட்டுள்ளது. 

Save Soil

இதுக்குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சத்குரு, இது தொலைநோக்கு பார்வைக்கொண்ட தலைமையில் அர்பணிப்பின் வெளிப்பாடாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Save Soil

உலகம் முழுவதும் மண் காப்போம் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஓளிரப்பட்டுள்ளது. 

Tap to resize

Save Soil

குறிப்பாக  நயாகரா நீர்வீழ்ச்சி, ஜெனிவாவில் உள்ள ஜெட் டியூ, மாண்ட்ரீல் ஒலிம்பிக் ஸ்டேடியம், டொராண்டோவின் டிவி டவர் மற்றும் பியாஸ்ஸா டெல் காம்போ உள்ளிட்ட இடங்களில் #savesoil பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Save Soil

இந்தியாவை பொறுத்தவரை மும்பையில் உள்ள பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கட்டிடம், சென்னையில் ஹூப்ளி ரயில் நிலையங்கள், கோவாவில் உள்ள அடல் சேது ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Save Soil

கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலம், துர்கம் செருவு பாலம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள புத்தர் சிலை ஆகிய இடங்களும் இதில் அடங்கும்.

Latest Videos

click me!