Malala Marriage: இஸ்லாமிய முறைப்படி மிக எளிமையான முறையில் அசார் என்பவரை கரம் பிடித்த மலாலா!!

Published : Nov 10, 2021, 02:58 PM IST

பெண்கள் கல்விக்காக போராடி, மிகச் சிறிய வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் மலாலா, அசார் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளதாக தன்னுடைய திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதற்க்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை இந்த தம்பதிக்கு தெரிவித்து வருகிறார்கள்.    

PREV
18
Malala Marriage: இஸ்லாமிய முறைப்படி மிக எளிமையான முறையில் அசார் என்பவரை கரம் பிடித்த மலாலா!!

பாகிஸ்தானை சேர்ந்த 24 வயது ஆகும் மலாலா, பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, இஸ்லாமிய மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள், இளம்வயதில் திருமணம், உள்ளிட்டவையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர்.

 

28

பாகிஸ்தானில் பிறந்து, பாகிஸ்தான் நடைமுறைகளுக்கு இவர் எதிராக குரல் கொடுத்து வந்ததனால், இவருக்கு 15 வயது இருக்கும்போது, கடந்த 2012ஆம் ஆண்டு தாலிபான்கள், இவரது போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியதில்  கழுத்தில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார்.

 

38

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் இவர், மிகச்சிறிய வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.

 

48

இஸ்லாமிய திருமண முறைகள் குறித்து கூட தன்னுடைய எதிர்ப்பை பல முறை பதிவு செய்துள்ள மலாலா, தற்போது அசார் மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

58

இது குறித்து மலாலா கூறுகையில்...  தன்னுடைய வாழ்க்கையில் இது பொன்னான நாள். இது அசார் என்பவருடன் தனக்கு திருமணம் முடிந்துள்ளது. தங்களுடைய குடும்பத்தினர் மத்தியில் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளதாகவும், அனைவரது ஆசிகளும், வாழ்த்துக்களும், தனக்கு தேவை என்றும் வாழ்க்கை பயணத்தை ஒன்றாக இணைந்து பயணிக்க போவதில் மிகவும் மகிழ்ச்சி என அறிவித்துள்ள இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

68

அசார் என்கிற பெயரைத் தவிர தன்னுடைய கணவர் குறித்து எந்த ஒரு தகவலையும் மலாலா வெளியிடாத நிலையில், இவரது கணவர் குறித்த தகவலும் தற்போது அதிகம் தேடப்பட்டு வருகிறது.

 

78

இவர் குறித்து வெளியாகியுள்ள தகவலில் அசார் மாலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உயர் செயல்பாட்டு மையத்தின் பொது மேலாளராக உள்ளார் என கூறப்படுகிறது.

 

88

மேலும் மலாலாவின் திருமணத்திற்கு, சமூக வலைதளத்திலும் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவருடைய  திருமணம் இஸ்லாமிய வழக்கப்படி நடந்துள்ளது என்பது மலாலா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

click me!

Recommended Stories