G7 மாநாட்டில் கலந்துகொண்ட நாட்டு தலைவர்களுக்கு அன்புப் பரிசு வழங்கினார் பிரதமர் மோடி!

First Published | Jun 28, 2022, 12:19 PM IST

G7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட மற்ற நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி இந்தியாவின் கலைநயத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அன்பு பரிசுகளை வழங்கினார். 

பிரதமர் நரேந்திர மோடி, தென்ஆப்ரிக்க அதிபருக்கு ராமாயணத்தை விளக்கும் விதமாக டோக்ரா கலைப் பொருளை பரிசாக வழங்கினார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு, பிளாட்டினம் வண்ணம் தீட்டப்பட்ட தேனீர் கப் செட்டை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.
 

Tap to resize

பிரான்ஸ் அதிபருக்கு ஒரு லிட்டர் அளவிளான பாட்டில்கள் கொண்ட ஜர்தோசி பெட்டியை, பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.
 

பிரதமர் நரேந்திர மோடி, அழகான மார்பிள் இன்லே டேபிள் டாப்-ஐ இத்தாலி பிரதமர் மரியோ த்ரகிருக்கு பரிசாக வழங்கினார். 

ஜெர்மன் சான்சிலர் அவர்களுக்கு ஒரு அழகிய கலைநயத்துடன் கூடிய வெண்கல குவளையை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ''ராமர் தர்பார்'' கலைப் பொருளை பரிசாக வழங்கினார்.

கனடா நாட்டு பிரதமருக்கு, பிரதமர் நரேந்திர மோடி, கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அழகான பட்டு விரிப்பை பரிசாக வழங்கினார்.

pm modi gift

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு உ.பி மாநிலம் நிஜாமாபாத்தில் கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்ட கருப்பு மண்பாண்ட பொருட்களை பரிசாக வழங்கினார்.

Latest Videos

click me!