இந்தக் கூட்டத்தில், தனது சகோதரி ரோகிணி ஆச்சார்யாவை கட்சியின் தேசியப் பாதுகாவலராக நியமிக்க வேண்டும் என்ற முன்மொழிவையும் தேஜ் பிரதாப் யாதவ் முன்வைத்தார். விரைவில் தனது சகோதரியை நேரில் சந்தித்து அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ரோகிணி ஆச்சார்யா, குடும்பத்தினரால் மனவேதனையால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், குடும்ப உறவுகளைத் துண்டிப்பதாகவும் அறிவித்திருந்த நிலையில், தேஜ் பிரதாப்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் அவரது கட்சியின் இந்த முடிவு, பீகாரில் என்.டி.ஏ. அரசு அமையவுள்ள சூழலில், லாலுவின் குடும்ப அரசியலில் ஒரு பெரிய பிளவை மேலும் வெளிப்படுத்தியுள்ளது.