அறுவைசிகிச்சை செய்யும் ஆப்டிமஸ் ரோபோ.. தரமான மருத்துவம்.. எலான் மஸ்க்கின் மாஸ்டர் பிளான்!

Published : Nov 16, 2025, 09:03 PM IST

டெஸ்லாவின் 'ஆப்டிமஸ்' மனித உருவ ரோபோக்கள் எதிர்காலத்தில் அதிநவீன அறுவை சிகிச்சைகளைச் செய்யும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த ரோபோக்கள் மூலம் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய முடியும் என அவர் நம்புகிறார்.

PREV
13
அறுவை சிகிச்சை செய்யும் ஆப்டிமஸ் ரோபோ

டெஸ்லா நிறுவனத்தின் 'ஆப்டிமஸ்' (Optimus) மனித உருவ ரோபோக்கள், எதிர்காலத்தில் தொழிற்சாலைப் பணியாளராக மட்டுமல்லாமல், அதிநவீன அறுவை சிகிச்சைகளைச் செய்யும் திறன் கொண்ட மருத்துவர்களாகவும் செயல்படும் என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

முதலீட்டாளர் ரான் பேரோனுடன் சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில், எலான் மஸ்க் தனது தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார்.

23
அறுவைசிகிச்சை நிபுணர்களை மிஞ்சும் ரோபோ

ஆப்டிமஸ் ரோபோவால் மிகவும் நுட்பமான அறுவைசிகிச்சைகள் உள்பட எந்தவொரு மருத்துவ நடைமுறையையும், ஏன் மனிதர்களால் செய்ய முடியாத மிகக் கடினமான விஷயங்களைக்கூட செய்ய முடியும் என்று மஸ்க் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், சுகாதாரத் துறையில் உள்ள மிகப் பெரிய தடை உயர்தர அறுவை சிகிச்சை நிபுணர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான் எனக் குறிப்பிட்டார்.

“உயர்தர அறுவை சிகிச்சை நிபுணர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர். அவர்கள் மரத்தில் காய்ப்பதில்லை. ஆனால், இப்போது அவர்கள் அனைவரும் தொழிற்சாலைகளில் உருவாக்கப்படுவார்கள்," என்று மஸ்க் கூறினார்.

33
எலான் மஸ்க்கின் திட்டம்

ஆப்டிமஸ் போன்ற மனித உருவ ரோபோக்களைப் பெரிய அளவில் உற்பத்தி செய்து உலகளவில் விநியோகித்தால், மேம்பட்ட மருத்துவச் சிகிச்சையின் செலவையும், பற்றாக்குறையையும் குறைக்க முடியும் என எலான் மஸ்க் கருதுகிறார்.

இதன்மூலம், உலகின் ஒவ்வொரு நபருக்கும் உயர்தர அறுவை சிகிச்சை நிபுணர்களின் சேவை கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories