அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், கர்ப்பிணிகள் பாராசிட்டமால் உட்கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படும் என்று கூறிய கருத்தை உலக சுகாதார மையம் (WHO) மறுத்துள்ளது. பாராசிட்டமால் ஒரு பாதுகாப்பான மருந்து என்றும் WHO தெளிவுபடுத்தியுள்ளது.
பாராசிட்டமால் மாத்திரைகளைத் தவிர்க்குமாறு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்தை, உலக சுகாதார மையம் (WHO) திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிரம்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.
25
டிரம்பின் குற்றச்சாட்டு
சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய டிரம்ப், "கர்ப்பிணிகள் பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொண்டால், அது கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் (Autism) அல்லது கவனச் சிதறல் நோயை (ADHD) ஏற்படுத்தும்" என்று தெரிவித்திருந்தார். அவசர காலத்தில் மட்டுமே பாராசிட்டமாலை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
35
உலக சுகாதார மையம் விளக்கம்
டிரம்பின் இந்தப் பேச்சு மருத்துவ உலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், உலக சுகாதார மையம் தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பாராசிட்டமால் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பாதுகாப்பான மருந்துகளில் ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்திற்காக இது அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உலகளவில், சுமார் 50% கர்ப்பிணிப் பெண்கள் பாராசிட்டமாலை பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது பல நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் விற்கப்படுகிறது.
55
மருத்துவர்கள் பரிந்துரை
காய்ச்சல் ஏற்படுவது கர்ப்பிணிப் பெண்களுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் ஆபத்தானது என்பதால், மருத்துவர்கள் பாராசிட்டமாலை பாதுகாப்பான மருந்தாகப் பரிந்துரைக்கின்றனர். எனவே, மக்கள் இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.