உலகின் டாப் 10 வலிமையான ராணுவ நாடுகள் - 2024!

Published : Aug 20, 2024, 11:34 AM IST

குளோபல் ஃபயர்பவர் அமைப்பின் தரவரிசைப்படி 2024 ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 வலிமையான ராணுவ நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா முன்னிலை வகிக்கின்றன. இந்தியா அதன் மிகப்பெரிய ராணுவ பலத்தால் உலகின் நான்காவது வலிமையான நாடாக திகழ்கிறது.  

PREV
110
உலகின் டாப் 10 வலிமையான ராணுவ நாடுகள் - 2024!
United State (அமெரிக்கா)

உலக வல்லரசுகளில் முதன்மையானதாக விளங்கும் அமெரிக்கா, மிகவும் சக்திவாய்ந்த ராணுவப் படையை கொண்டுள்ளது. குளோபல் ஃபயர்பவரின் ஏப்ரல் 2024 நிலவரப்படி, அமெரிக்கா உலகளவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இராணுவ ஆயுத்தில் 92 போர்க்கப்பல்கள், 11 விமானம் தாங்கிகள், 13,300 விமானங்கள் மற்றும் 983 ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளன. கூடுதலாக, அமெரிக்கா ராணுவ பாதுகாப்பு செலவினத்திற்காக $831 பில்லியன் செலவிடுகிறது.
 

210
Russia (ரஷ்யா)

இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யா தனது விமானம் மற்றும் கடற்படை வலிமையின் அடிப்படையில் பாராட்டத்தக்க நிலையில் உள்ளது. ரஷ்யாவிடம் ஏறத்தாழ 4,100 ராணுவ விமானங்கள், 35,70,000 ராணுவ வீரர்களை கொண்டுள்ளது. பட்ஜெட்டில் ராணுவத்திற்காக $109 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
 

310
China (சீனா)

3வது இடத்தை சீனா பிடித்துள்ளது. ஏப்ரல் 2024 நிலவரப்படி, சீன ராணுவத்தில் 50 பெரிய போர்க்கப்பல்கள் மற்றும் 78 நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட பல்வேறு இராணுவ வளங்களைக் கொண்டுள்ளது. 31,70,000 போர் வீரர்களையும் கொண்டுள்ளது. ராணுவத்திற்காக ஒரு ஆண்டுக்கு சுமார் $227 பில்லியன் செலவிடப்படுகிறது.
 

410
India (இந்தியா)

உலகின் வலிமையான நாடுகளில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் செல்வாக்கு அதன் கணிசமான மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் மூலம் நிறுவப்பட்டது. ஜனவரி 2024 நிலவரப்படி, இந்திய ராணுவத்தில் சுமார் 51,37,550 ராணுவ வீரர்ககள் உள்ளனர். மொத்த பட்ஜெட்டில் தேச பாதுகாப்பிற்காக $74 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
 

510
South Korea (தென் கொரியா)

ஐந்தாவது இடத்தில் உள்ள தென் கொரியா மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் தயார்நிலையையும் வெளிப்படுத்தி, வலுவான இராணுவ வலிமையை வெளிப்படுத்துகிறது. தென் கொரிய ராணுவத்தில், 112 பவர் ஹெலிகாப்டர்கள் உட்பட 133,000 வாகனங்கள் மற்றும் 739 ஹெலிகாப்டர்கள் உள்ளன. 38,20,000 ராணுவ வீரர்கள் உள்ளனர். ராணுவத்திற்காக மொத்தம் $44.7 பில்லியன் தொகை செலவிடப்படுகிறது.
 

610
United Kingdom (யுனைட்டட் கிங்டம்)

உலகளவிலான ராணுவ வலிமையில் இங்கிலாந்து 6வது இடத்தை பிடித்துள்ளது. யுகே இரண்டு விமானம் தாங்கி கப்பல்களைக் கொண்டுள்ளது, அவை சீனா, இத்தாலி மற்றும் இந்தியாவுடன் இணைந்துள்ளன. ராணுவத்தில் 11, 08,860 போர் வீரர்கள் உள்ளனர். ராணுவத்திற்காக ஓர் ஆண்டுக்கு சுமார் $62.8 பில்லியன் தொகை ஒதுக்கப்படுகிறது.
 

710
Japan (ஜப்பான்)

ஜப்பான் ஏழாவது இடத்தைப் பிடித்ததுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இராணுவப் படையை கொண்டுள்ளது. ஜனவரி 2024 நிலவரப்படி, 1,400 இராணுவ விமானங்கள் மற்றும் 111,000 க்கும் அதிகமான வாகனங்களைக் கொண்ட ஒரு பரந்த கடற்படையைக் கொண்ட ஜப்பானின் இராணுவ பலம் குறிப்பிடத்தக்கது. ராணுவத்தை மேம்படுத்த சுமார் $53 பில்லியன் செலவிடுகிறது.
 

810
Turkey (துருக்கி)

துருக்கி 8வது இடத்தைப் பிடித்ததுள்ளது. ஜனவரி 2024 நிலவரப்படி, துருக்கியின் இராணுவ வலிமையானது மொத்தம் 883,900 இராணுவ வீரர்கள் மற்றும் $40.0 பில்லியன் இராணுவ செலவினங்களுடன், துருக்கியின் ஆயுதப் படைகள் பல்வேறு பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தேவைகளுக்கு எப்பொழுதும் தயாராக உள்ளன.

Unknown Fact of Abroad Study | வெளிநாட்டில் படிப்பு பணம் இருந்தால் மட்டுமா?
 

910
Pakistan (பாகிஸ்தான்)

பாகிஸ்தான் ராணுவ வலிமையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இது உலகநாடுகளிடையே, வளர்ந்து வரும் இராணுவ திறன்களையும் செல்வாக்கையும் எடுத்துக்காட்டுகிறது. ஜனவரி 2024-ன் படி பாகிஸ்தான் ராணுவத்தில் 3,700 டாங்கிகள், 1,400 இராணுவ விமானங்கள், ஒன்பது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 654,000 செயல் வீரர்களைக் கொண்ட ஒரு வலுவான படையை பாகிஸ்தான் கொண்டுள்ளது.

Ancient Pyramids Collapse | கெட்டகாலம் தொடங்கியாச்சு?
 

1010
Italy (இத்தாலி)

பத்தாவது இடத்தில் இத்தாலி உள்ளது. இத்தாலியிடம் 404 ஹெலிகாப்டர்கள், இதில் 58 பவர் ஹெலிகாப்டர்கள் உள்ளன. மேலும், இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை கொண்டது. சுமார் 2 லட்சத்து 89000 ராணுவ வீரர்கள் உள்ளனர். ராணுவ செலவுக்காக ஆண்டுக்கு சுமார் $31.6 பில்லியன் டாலர் செலவிடுகிறது.
 

Read more Photos on
click me!

Recommended Stories