ஆகஸ்ட் 19ல் தோன்றும் சூப்பர் ப்ளூ மூன்! அரிய வானியல் நிகழ்வைப் பார்ப்பது எப்படி?

First Published | Aug 17, 2024, 10:55 PM IST

சூப்பர் மூன்கள் பொதுவாக வருடத்திற்கு 3-4 முறை நிகழ்கின்றன. இந்த ஆகஸ்ட்டில், சூப்பர் மூனும் ப்ளூ மூனும் இணையும் அரிதான வானியல் நிகழ்வைக் காண முடியும்.

What is Supermoon blue moon?

சூப்பர் மூன்கள் பொதுவாக வருடத்திற்கு 3-4 முறை நிகழ்கின்றன. இந்த ஆகஸ்ட்டில், சூப்பர் மூனும் ப்ளூ மூனும் இணையும் அரிதான வானியல் நிகழ்வைக் காண முடியும். இந்த அபூர்வமான வானியல் நிகழ்வை பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்.

August 19 Supermoon blue moon

பொதுவாக, ஆகஸ்ட் மாதம் வரும் முழு நிலவுக்கு 'ஸ்டர்ஜன் மூன்' என்று பெயர். இந்த சூப்பர் மூன் ப்ளு ஆகஸ்டில் வருவதால் சூப்பர் ப்ளூ மூன் 'ஸ்டர்ஜன் மூன்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கண்கவர் வான்நிகழ்வு இந்த ஆண்டு தோன்றும் நான்கு சூப்பர் மூன்களில் முதலாவது.

Tap to resize

Supermoon blue moon on August 19

அடுத்த சூப்பர் மூன் நிகழ்வுகள் செப்டம்பர் 18, அக்டோபர் 17 மற்றும் நவம்பர் 15 ஆகிய தேதிகளில் வானில் தோன்றுவதைப் பார்க்கலாம்.

How to watch Supermoon blue moon

அரிய சூப்பர் ப்ளூ மூன் அல்லது ‘ஸ்டர்ஜன் மூன்’ ஆகஸ்ட் 19, 2024 அன்று தோன்றும். அன்று நிலவின் ஒளி வழக்கத்தை விட 30 சதவீதம் பிரகாசமாக இருக்கும். ஆகஸ்ட் 19 அன்று தேதிக்குப் முன்னாலும் பின்னாலும் கூட சில நாட்கள் நிலவு அதிக வெளிச்சமாக இருப்பதைக் காணலாம். உலகின் வெவ்வேறு பகுதிகளில் சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வைப் பார்க்க முடியும்.

First Supermoon blue moon in 2024

வட அமெரிக்காவில் ஆகஸ்ட் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை சுமார் மூன்று நாட்களுக்கு முழுமையாகத் தோன்றும். ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலையில் சூப்பர் ப்ளூ மூன் நிலவைப் பார்க்கலாம்.

Supermoon blue moon in 2024

குறிப்பாக, இந்தியாவில் ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 20 அதிகாலை வரை பார்க்க முடியும். ஐரோப்பிய நாடுகளில் ஆகஸ்ட் 18 மாலை முதல் ஆகஸ்ட் 19 இரவு வரையும் பிறகு மீண்டும் ஆகஸ்ட் 20 அதிகாலையிலும் சூப்பர் ப்ளூ மூன் நிலவைக் காணலாம். ஆப்பிரிக்காவில் ஆகஸ்ட் 18 மாலை முதல் ஆகஸ்ட் 19 இரவு வரை மற்றும் ஆகஸ்ட் 20 அதிகாலை வரை பார்க்கலாம்.

Supermoon blue moon

வெளிச்சம் குறைவாக உள்ள இருண்ட இடத்தைக் கண்டுபிடித்து, அங்கிருந்து சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வைப் பார்க்கலாம். தேர்ந்தெடுத்த இடத்திற்கு முன்கூட்டியே சென்றால், நிலவை பல்வேறு நிலைகளில் பார்த்து ரசிக்கலாம். தொலைநோக்கிகள் அல்லது பைனாக்குலர் மூலம் பார்த்தால் இன்னும் தெளிவாகப் பார்க்க முடியும். கேமராவை வைத்து இந்த அழகிய தருணத்தைப் புகைப்படமும் எடுக்கலாம்.

Latest Videos

click me!