இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல்களில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தெஹ்ரானை மையமாகக் கொண்டு உலக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தியதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக இஸ்ரேல் தரப்பில் தகவல் வெளியானது. பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் இதை குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கமேனி உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த தகவல்கள் வெளிவந்த உடனேயே ஈரான் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்தது.
23
இஸ்ரேல் ராணுவம் தகவல்
அதன் பின்னர், தெஹ்ரானில் அமைந்துள்ள கமேனியின் அலுவலகம் கடுமையாக சேதமடைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. மேலும், பல உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஈரான் தரப்பில் முதலில் கமேனியின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் வெளியானதாகவும், பின்னர் சில செய்தி நிறுவனங்கள் மரணச் செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தியதாகவும் கூறினார்.
33
ஈரான் முழுவதும் தாக்குதல்
ஈரான் முழுவதும் நடந்ததாகக் கூறப்படும் இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மிகமுக்கிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. இது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ந்த தகவலைத் தொடர்ந்து, ஈரான் அரசு நாடு முழுவதும் 40 நாட்கள் அதிகாரப்பூர்வ துக்ககாலம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது. பொதுமக்கள் அமைதியாக இருந்து தேசிய ஒற்றுமையை காக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.