பாகிஸ்தான் - ஆப்கன் மோதல்: ஆபரேஷன் கசாப் லில் ஹக், 133 பேர் பலி

Published : Feb 27, 2026, 10:29 PM IST

எல்லையில் தலிபான்கள் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு, காபூல் மற்றும் கந்தஹாரில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசித் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

PREV
15
பாகிஸ்தானின் 55 வீரர்கள் கொலை..?

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய 'ஆபரேஷன் கசாப் லில் ஹக்' தாக்குதலில் 133 பேர் கொல்லப்பட்டனர். பதிலுக்கு 55 பாக். வீரர்களை கொன்றதாக ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.

25
மோதல்

கோஸ்ட் மாகாணத்தில் உள்ள 19 பாகிஸ்தான் ராணுவ நிலைகளையும், ஒரு முக்கிய தலைமையகத்தையும் கைப்பற்றியதாக தலிபான் அரசு கூறியதை அடுத்து மோதல் வெடித்தது.

35
பதிலடி தாக்குதல் மட்டுமே

பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.

45
பாகிஸ்தான் மறுப்பு

தாக்குதலில் 55 பாக். வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கூறுவதை பாகிஸ்தான் மறுத்துள்ளது. பாக். தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

55
அப்பாவி மக்களைக் கொன்ற பாகிஜ்தான்..?

பயங்கரவாத முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தே மோதல்கள் ஏற்பட்டன. இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் அப்பாவி மக்களை கொன்றது.

Read more Photos on
click me!

Recommended Stories