Baba Vanga predictions 2026: நமது பூமிக்கு வெளியே இருக்கும் பிற கோள்களிலோ அல்லது விண்வெளியின் பிற பகுதிகளிலோ ஏலியன்கள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு நம்பகமான ஆதாரம் இல்லை.
வேற்றுக்கிரகவாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா? இல்லையா? அவர்கள் பூமிக்கு வருவார்களா? என்பது நீண்டகாலமாக ஒரு பேசுபொருளாக இருந்து வருகிறது. நமது பூமிக்கு வெளியே இருக்கும் பிற கோள்களிலோ அல்லது விண்வெளியின் பிற பகுதிகளிலோ ஏலியன்கள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு நம்பகமான ஆதாரம் இல்லை.
விசித்திரமான விண்கல்
இந்த நிலையில், சமீபகாலமாக விண்வெளியில் நிகழும் மாற்றங்கள் ஏலியன்கள் குறித்த பேச்சை அதிகரித்துள்ளது. அதாவது சூரிய குடும்பத்திற்குள் நுழைந்துள்ள '3I/ATLAS' என்ற விண்கல் விசித்திரமான முறையில் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், விஞ்ஞானிகள் கவனித்து வருகின்றனர். இது ஒரு விண்கல் தானா? இல்லை ஏலியன்களின் உளவு வாகனமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
24
பாபா வங்கா கணிப்பு உண்மையாகிறதா?
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் ஏலியன்கள் மற்றும் பறக்கும் தட்டுகள் தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிட உத்தரவிட்டுள்ளது ஏலியன்கள் குறித்த பேச்சை அதிகரித்துள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான 'பாபா வங்கா' ஏலியன்கள் குறித்து முன்பே கணித்தது தான். அதாவது 2026ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகப்பெரிய விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும். அப்போது மனிதர்களுக்கும், ஏலியன்களுக்கும் இடையிலான தொடர்பு என்று பாபா வங்கா கணித்திருந்தார்.
34
யார் இந்த பாபா வங்கா?
பாபா வங்கா கணித்தபடி தான் சூரிய குடும்பத்திற்குள் நுழைந்த விண்கல் குறித்தும், ஏலியன்கள் குறித்த டிரம்பின் கருத்தும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல்கேரியாவின் வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவாவை உலகம் பாபா வங்கா என்று அழைக்கிறது. அவரது கணிப்புத் திறன் அற்புதமானது. கற்பனை செய்ய முடியாதது.
அவர் சிறு வயதிலிருந்தே பார்வையற்றவராக இருந்தார். மேலும் பல்கேரியாவின் பெலாசிகா மலைகளின் ரூபிட் பகுதியில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாழ்ந்தார். திருமணமாகி சில ஆண்டுகள் காணமால் போன அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்துள்ளர்.
பாபா வங்கா 1911 ஜனவரி 31 அன்று பிறந்தார், 1996 ஆகஸ்ட் 11 அன்று இறந்தார். 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும் கிழக்கு ஐரோப்பாவில் அவரது தெளிவுத்திறன் மற்றும் முன்னறிவிப்புத் திறன்களுக்காக அவர் பரவலாக அறியப்பட்டார். அவர் பல தசாப்தங்களுக்கு முன்பே கணிப்புகளைச் செய்துள்ளார். பாபா வங்க கணித்த 2001 அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல், கொரோனோ வைரஸ் ஆகியவை உண்மையில் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.