நள்ளிரவில் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக். பிரதமர்.. இம்ரான் கானின் நிலை..?

Published : Feb 24, 2026, 03:13 PM IST

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று நள்ளிரவு திடீரென மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

PREV
16
இன்ரான் கானின் உடல்நிலை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நள்ளிரவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத் மருத்துவமனையில் அவருக்கு தீவிர கண் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது வலது கண்ணில் 15% மட்டுமே பார்வை உள்ளதாக சொல்லப்படுகிறது.

26
குடும்பத்தினர் கவலை

இம்ரான் கான் கடந்த மூன்று ஆண்டுகளாக அடியாலா சிறையில் உள்ளார். குடும்பத்தினர், ஆதரவாளர்கள், தனிப்பட்ட மருத்துவர் மற்றும் வழக்கறிஞர்கள் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வீடியோ வெளியானது.

36
ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்களின் கேள்வி

ஏன் இப்படி ரகசியமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என பிடிஐ தலைவர் பாரிஸ்டர் கோஹர் கான் கேள்வி எழுப்பியுள்ளார். இம்ரானுக்கு ஷிஃபா சர்வதேச மருத்துவமனையில், குடும்பத்தினர் முன்னிலையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றார்.

46
இம்ரான் கானின் கண் நிலை என்ன?

அவரது வலது கண்ணில் 15% மட்டுமே பார்வை இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. மூன்றாவது ஊசி மார்ச் 24 அன்று போடப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

56
குடும்பத்தின் எதிர்வினை மற்றும் நம்பிக்கையின்மை

அரசு சிகிச்சை மீது நம்பிக்கை இல்லை என இம்ரானின் சகோதரி அலீமா கான் கூறியுள்ளார். கைதிக்கு சிகிச்சை அளிக்கும்போது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நள்ளிரவில் கொண்டு சென்றது ஏன் என கேள்வி எழுப்பினார்.

66
பாதுகாப்பு மற்றும் அரசாங்க அறிக்கை

இம்ரான் கானுக்கு மருத்துவமனையில் உச்சக்கட்ட பாதுகாப்புடன், அனைத்து சட்ட உதவிகளும் வழங்கப்பட்டதாக அமைச்சர் தாரிக் ஃபசல் சவுத்ரி கூறினார். அவரது பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது ஊசிக்குப் பிறகு அவர் சிறைக்கு மாற்றப்படுவார்.

Read more Photos on
click me!

Recommended Stories