துபாயில் 'சீல் துபாய் மரினா' என்ற பெயரில் உலகின் மிக உயரமான ஹோட்டல் கட்டப்பட்டு வருகிறது. 377 மீட்டர் உயரம், 82 தளங்கள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
உலகிலேயே மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. 'சீல் துபாய் மரினா' (Ciel Dubai Marina) என்ற இந்த ஹோட்டல் கட்டிடக் கலையிலும் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
25
82 தளங்கள்
'சீல் துபாய் மரினா' ஹோட்டல் 377 மீட்டர் (1236.88 அடி) உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. இதில் மொத்தம் 82 தளங்கள் உள்ளன.
1,000க்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் சூட்களுடன், இந்த சொகுசு ஹோட்டல் துபாய் மரினா, பாம் ஜுமேரா மற்றும் அரேபிய வளைகுடாவின் பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
35
76வது தளத்தில் நீச்சல் குளம்
இந்த ஹோட்டலின் 76வது தளத்தில் பிரமாண்டமான நீச்சல் குளம் உள்ளது. இது உலகின் மிக உயரமான இன்ஃபினிட்டி நீச்சல் குளங்களில் ஒன்றாகும்.
இங்கு 24 மணி நேர உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) செயல்படுகிறது. 61வது தளத்தில் ஸ்பா வசதியும் இடம்பெற்றுள்ளது. இது பிப்ரவரி 2026இல் திறக்கப்பட உள்ளது.
சீல் துபாய் மரினாவில் எட்டு உணவகங்கள் செயல்படுகின்றன. Tattu (டட்டு) என்ற உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஆசிய உணவகத்தின் கிளை, 74வது தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது நவீன சீன மற்றும் ஜப்பானிய உணவு வகைகளை வழங்குகிறது.
West 13 (வெஸ்ட் 13) என்ற உணவகம் இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உணவுகளையும் மத்தியதரைக் கடல் (Mediterranean) பிராந்திய உணவுகளையும் வழங்குகிறது. East 14 (ஈஸ்ட் 14) இது ஆசிய நாடுகளின் பஃபே பாணி உணவை வழங்குகிறது.
55
கடற்கரை கிளப்
பாம் ஜுமேரா மற்றும் அப்டவுன் துபாய் போன்ற முக்கிய இடங்களில் இருந்து சில நிமிட தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், கடற்கரைக்கு அருகிலேயே உள்ளது. கடற்கரையோரம் நேரத்தைக் கழிக்க சோலுனா கடற்கரை கிளப் இருக்கிறது. குழந்தைகளுக்கான பிரத்யேகமான ஸ்பிளாஷ் பேட் (Splash Pad), கிட்ஸ் கிளப் மற்றும் குழந்தைகளுக்கு விருப்பமான உணவு மெனுக்கள் உள்ளன.