60 ஆயிரம் விஷ பாம்புகளை வளர்த்து கோடீஸ்வரியான 30 வயது பெண்... இது எங்க?

Published : Apr 21, 2026, 12:53 PM IST

30 வயது பெண் ஒருவர், நகரத்து வாழ்க்கையை விட்டுவிட்டு கிராமத்தில் பாம்புப் பண்ணை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு 1.20 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவரைப் பற்றி பார்க்கலாம்.

PREV
14
Women Earning Crores in Snake Farm Business

பாம்புன்னா படையும் நடுங்கும்னு சொல்வாங்க. ஆனா, ஒரு பொண்ணு பல்லாயிரக்கணக்கான விஷப் பாம்புகளை வளர்த்து, அதுல கோடிக்கணக்குல சம்பாதிக்கிறாங்கன்னு சொன்னா நம்ப முடியுதா? சீனாவைச் சேர்ந்த 30 வயதான கின் தான் அந்த சாதனைப் பெண். நகரத்து சொகுசு வாழ்க்கையை விட்டுட்டு, தன்னோட சொந்த கிராமத்துக்கு வந்து பாம்புப் பண்ணை நடத்திட்டு வர்றாங்க. சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த கின்னின் அப்பா, ஒரு பாம்புப் பண்ணை நடத்தி வந்திருக்கார். இப்போ அந்தப் பொறுப்பை கின் எடுத்து நடத்திட்டு வர்றாங்க. இந்தப் பண்ணையில இப்போ 60,000-க்கும் அதிகமான விஷப் பாம்புகள் இருக்கு.

24
விஷ பாம்புகளை வளர்ப்பது ஏன்?

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை செய்தியின்படி, கின்னோட பண்ணையில 50,000 'ஐந்தடி பாம்புகளும்' (Five-step snakes), சுமார் 10,000 நல்ல பாம்புகளும் (Cobras) இருக்கு. 'இந்த பாம்புகளுக்கு சாப்பாடு கொடுக்கிறது ரொம்பவே ரிஸ்க்கான வேலை. ஆனா எனக்கு பயம் இல்லை. நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே எங்க அப்பா இந்த தொழிலை செஞ்சிட்டு இருக்கார்'னு கின் சொல்றாங்க. இந்தப் பண்ணையிலிருந்து கிடைக்கிற பாம்பு விஷம், தோல், இறைச்சிக்கு மார்க்கெட்ல பெரிய டிமாண்ட் இருக்கு.

34
1.20 கோடி வருமானம்

பாரம்பரிய சீன மருந்து தயாரிப்புக்காகவும், அறிவியல் ஆராய்ச்சிக்காகவும் பாம்பு விஷம், உலர்ந்த தோல், பித்தப்பை, பாம்பு எண்ணெய் போன்றவற்றை இங்க விற்பனை செய்றாங்க. ஒரு கிராம் விஷம், அதன் தரத்தைப் பொறுத்து 40 முதல் 200 யுவான் வரை விலை போகுது. பாம்பு இறைச்சி ஒன்னுக்கு 300 யுவான் வரை விலை கிடைக்குமாம். எல்லா செலவுகளும் போக, இந்த பிசினஸ் மூலமா கின்னுக்கு வருஷத்துக்கு ஒரு மில்லியன் யுவான், அதாவது இந்திய மதிப்புல சுமார் 1.20 கோடி ரூபாய் லாபம் கிடைக்குது.

44
இன்ஸ்டாவிலும் விழிப்புணர்வு

'The Girl Who Collects Snake Venom' (பாம்பு விஷத்தை சேகரிக்கும் பெண்) என்ற பெயர்ல சோஷியல் மீடியாவிலும் கின் ரொம்ப ஆக்டிவ். அதில் அவருக்கு 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் இருக்காங்க. தன்னோட வேலை தொடர்பான வீடியோக்களை அடிக்கடி ஷேர் பண்றாங்க. ஆனாலும், இந்த வேலையில இருக்கிற ஆபத்து பற்றியும், பாம்பு கடிச்சா ஏற்படுற கடுமையான வலி பற்றியும் தன்னோட ஃபாலோயர்ஸ்களை எச்சரிக்கவும் அவங்க மறக்கல. 'ஒரு தடவை கடி வாங்கிட்டா, அந்த வலியை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது'னும் சொல்றாங்க. இந்த வேலையை செய்ய உண்மையிலேயே பெரிய தைரியம் வேணும்னு பலரும் சோஷியல் மீடியால கமெண்ட் பண்ணிட்டு வர்றாங்க.

Read more Photos on
click me!

Recommended Stories