2K கிட்ஸ் தலையில் இடியை இறக்கும் அரசு: 16 வயதுக்கு உட்பட்டவர்கள் YouTube, Insta பயன்படுத்த தடை

Published : Nov 07, 2024, 01:57 PM ISTUpdated : Nov 07, 2024, 01:58 PM IST

அண்மை காலமாக சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை விதிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

PREV
15
2K கிட்ஸ் தலையில் இடியை இறக்கும் அரசு: 16 வயதுக்கு உட்பட்டவர்கள் YouTube, Insta பயன்படுத்த தடை

உலகம் முழுவதும் டிஜிட்டல் யுகத்தின் ஆதிக்கத்தால் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டை அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதன் காரணமாக நம் நாட்டிலும் தொடர்ந்து ஸ்மார்ட்போன், இணையதளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

25

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடம் எடுத்த நிலையில், இதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது.

35

படிப்பை கடந்து பொழுதுபோக்கிற்காக செல்போனை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு வழக்கமான நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பெற்றோர் செல்போனை கொடுக்கக் கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

45

இந்நிலையில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த முடியாத வகையில் சட்டம் இயற்றுவதற்கான பணிகளில் ஆஸ்திரேலிய அரசு தீவிரம் கட்டி வருகிறது. அதன்படி Instagram, Facebook, TikTok, X, Youtube உட்பட பல சமூக வலைதளங்களை இந்த தடையின் கீழ் கொண்டுவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55

குழந்தைகளுக்கு சமூக வலைதளங்கள் தீங்கு விளைவிப்பதாகவும், அதனால் இந்த சட்டத்தை அமல்படுத்த இருப்பதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அறிவித்திருக்கிறார். சட்டம் அமலுக்கு வந்த பின்னர், பெற்றோர்களின் அனுமதி இருந்தாலும் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories