அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், டிரம்ப் குடும்பத்தினர் மீது கவனம் திரும்பியுள்ளது. 2024 தேர்தலில் ட்ரம்பின் வெற்றி உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவி மெலானியா, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் தங்கள் மகன் பரோன் முதல் முறையாக வாக்களித்த தருணத்தைப் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார்.
பரோன் டிரம்ப், சமீபத்தில் பாம் பீச்சில் தனது பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டபோது, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். ஆறடி உயரத்துக்கு மேல் வளர்ந்திருக்கும் பரோன் குடும்பத்தில் அனைவரையும் விட உயரமாக தனித்துத் தெரிந்தார்.