யார் இந்த உஷா வான்ஸ்? அமெரிக்காவின் செகண்ட் லேடியாகும் இந்திய வம்சாவளி பெண்!

Published : Nov 07, 2024, 09:15 AM ISTUpdated : Nov 07, 2024, 09:37 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றிருக்கும் டிரம்புடன் துணை அதிபராக பதவியேற்க இருக்கிறார் ஜே.டி.வான்ஸ். அவரது மனைவி உஷா வான்ஸ் இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷாவின் பின்னணி பற்றித் இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

PREV
16
யார் இந்த உஷா வான்ஸ்? அமெரிக்காவின் செகண்ட் லேடியாகும் இந்திய வம்சாவளி பெண்!
Usha Vance

வழக்கறிஞரான உஷா வான்ஸ், அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி செகண்ட் லேடி என்ற பெருமையைப் பெறுகிறார். இவரது குடும்பம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. 1986இல் உஷாவின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறினர்.

26
Who is Usha Vance?

உஷா வான்ஸ் அமெரிக்காவின் சான் டியாகோவில் தான் பிறந்தார். உயர்-நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் கார்ப்பரேட் வழக்கறிஞராக பணிபுரிகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்வியை முடித்த உஷா, வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். உஷா வான்ஸ் சட்டத் துறையில் நுழைவதற்கு முன்பு யேல் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

36
Usha Vance and DJ Vance

ஓஹியோ செனட் பிரதிநிதியான ஜே.டி.வான்ஸ் தான் உஷாவின் கணவர். உஷா வான்ஸ் - ஜே.டி.வான்ஸ் இருவரும் யேல் சட்டப் பள்ளியில்தான் முதலில் சந்தித்துக்கொண்டனர். 2014 இல் கென்டக்கியில் திருமணம் செய்துகொண்டனர். நியூயார்க் டைம்ஸ் தகவலின்படி, ஜே.டி.வான்ஸ் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டம் பெற்றுள்ளார்.

46
Usha Vance Profession

நீதிபதிகள் ஜான் ராபர்ட்ஸ், பிரட் கவனாக் ஆகியோருக்கு எழுத்தராகவும் உஷா வான்ஸ் பணிபுரிந்துள்ளார். பின்னர், பிரட் கவனாக் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டார்.

56
Usha Vance Jobs

யேல் ஜர்னல் ஆஃப் லா அண்ட் டெக்னாலஜி என்ற பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராகவும் உஷா வான்ஸ் பணியாற்றியுள்ளார். தி யேல் லா ஜர்னலின் நிர்வாக மேம்பாட்டு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

66
Usha Vance Uncle

உஷா வான்ஸின் மாமா சுப்ரமண்ய சாஸ்திரி ஆர்.எஸ்.எஸ். செயல்பாட்டாளர் ஆவார். இந்தியாவில் எமர்ஜென்சி அமலில் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories