90ஸ் கிட்ஸ்க்கு ரொம்ப பிடித்த WWF; அதுக்கும் அதிபர் டிரம்புக்கும் ஒரு பாண்டிங் இருக்கு தெரியுமா?

First Published | Nov 6, 2024, 8:09 PM IST

Donald Trump : அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்கவிருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவின் அதிபராக அவர் பதவியேற்க உள்ளது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Donald Trump

அமெரிக்காவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் மாகாணத்தில் கடந்த 1946 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் டொனால்ட் ட்ரம்ப். இப்போது அவருக்கு வயது 78, அண்மையில் நடந்த முடிந்த அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸை சில லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்திருக்கிறார். 270 இடங்களை கைப்பற்றினால் வெற்றி என்ற இலக்கோடு இந்த அதிபர் தேர்தல் நடந்த நிலையில், கமலா ஹாரிஸுக்கு 224 இடங்களும், டொனால்ட் ட்ரம்ப்க்கு 277 இடங்களும் கிடைத்திருக்கிறது. பெரும்பான்மையை நிரூபித்த நிலையில் அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பதவி ஏற்க உள்ளார்.

PM Modi Wishes Donald Trump: டிரம்ப் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

US President Donald

டொனால்ட் டிரம்ப் கடந்த 1946ம் ஆண்டு பிறந்த நிலையில் தன்னுடைய 22 வது வயது முதல் ரியல் எஸ்டேட் துறையில் செயல்பட்டு வருகின்றார். அதன் பிறகு 1987 ஆம் ஆண்டு அமெரிக்காவின் குடியரசு கட்சியில் உறுப்பினராக இணைந்த இவர், 1999 ஆம் ஆண்டு ஜனநாயக கட்சிக்கு இடம் பெயர்ந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக அரசியலில் பயணித்து வந்த அவர் 2009 ஆம் ஆண்டு மீண்டும் தன்னுடைய தாய் கட்சியான குடியரசு கட்சிக்கே திரும்பினார். இந்த சூழலில் 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக முதல் முறையாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய தொடக்க காலத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வந்த டொனால்ட் ட்ரம்ப் இப்போது 500க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

US President

1985 ஆம் ஆண்டு உலக அளவில் புகழ்பெற்றிருந்த (90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த) Wrestle Mania என்கின்ற மல்யுத்த நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கினார். சுமார் 13 ஆண்டுகள் Wrestle Mania மல்யுத்த நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் 90 கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த WWF மல்யுத்த நிகழ்ச்சிக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒரு ஸ்பான்சராக இவர் திகழ்ந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

WWF

அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீது 3500க்கும் அதிகமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. நூற்றுக்கும் அதிகமான வருமான வரி தொடர்பிலான வழக்குகளும் நிலுவையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அவர் அரசியலில் களம் இறங்கி செயல்பட்டு வரும் இந்த 40 ஆண்டுகால பயணத்தில் 14 பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல், ரியல் எஸ்டேட் மட்டுமல்லாமல் இதுவரை எட்டு திரைப்படங்களில் டொனால்ட் ட்ரம்ப் நடித்திருக்கிறார்.

கம்பேக் கொடுத்த டொனால்ட் ட்ரம்ப்! வரலாற்று வெற்றியுடன் மீண்டும் அமெரிக்க அதிபராகிறார்!

Latest Videos

click me!