வெற்றியை நோக்கி டொனால்ட் டிரம்ப்! இனி கமலா ஹாரிஸ் ஜெயிக்க சான்ஸே இல்ல!

First Published | Nov 6, 2024, 9:44 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார். பெரும்பான்மைக்கு 270 எலெக்டொரல் வாக்குகள் பெறவேண்டும்.

US Election Results 2024

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார். அசோசியேட்டட் பிரஸ் டிராக்கரின் சமீபத்திய தகவலின்படி, டொனால்ட் டிரம்ப் 210, கமலா ஹாரிஸ் 112 எலெக்டொரல் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

Donald Trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்கு 270 எலெக்டொரல் வாக்குகள் பெறவேண்டும் என்ற நிலையில், டொனால்டு டிரம்ப் கிட்டத்தட்ட 200 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ட்ரம்ப் கமலா ஹாரிஸை விட அதிக வாக்குகளைப் பெற்று வருகிறார். இதனால் இன்று மதியத்திற்குள் முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப், ஹாரிஸ் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகும் 7 மாகாணங்கள்!

Latest Videos


Kamala Harris

டொனால்ட் டிரம்ப் கமலா ஹாரிஸை விட முன்னிலை பெற்றிருந்தாலும், கமலா ஹாரிஸ் இன்னும் முடிவை மாற்றியமைக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இறுதி முடிவு மாறுபடலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Raja Krishnamoorthy wins Illinois

அதிக வாக்குகள் கொண்ட கலிஃபோர்னியா மாகாணத்தை கமலா ஹாரிஸ் கைப்பற்றி இருக்கிறார். நியூயார்க் மாகாணத்திலும் கமலா ஹாரிஸுக்கு வெற்றி கிடைத்திருப்பது அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இதனிடையே, ஜனநாயகக் கட்சியின் சார்பில் இல்லினாய்ஸில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, வெற்றி பெற்றுள்ளார்.

click me!