அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸை முந்தும் டொனால்ட் டிரம்ப்!

First Published Nov 5, 2024, 10:43 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான அட்லஸ்இன்டெல் (AtlasIntel) புதிய கருத்துக்கணிப்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸை ஏழு முக்கிய மாநிலங்களில் முன்னிலை வகிக்கிறார் என்று கூறியுள்ளது. இருப்பினும் வித்தியாசம் குறைவாக உள்ளது.

US Election

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான அட்லஸ்இன்டெல்லின் (AtlasIntel) புதிய கருத்துக்கணிப்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸை ஏழு முக்கிய மாநிலங்களில் முன்னிலை வகிக்கிறார் என்று கூறியுள்ளது. இருப்பினும் வித்தியாசம் குறைவாக உள்ளது.

வடக்கு கரோலினா, ஜார்ஜியா, அரிசோனா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் டிரம்ப் வெற்றி பெற விரும்புகிறார். 2016 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் டொனால்ட் டிரம்ப் கட்சி வெற்றி பெற்ற அயோவாவில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக ஆன் செல்சரின் புதிய கருத்துக்கணிப்பு வெளிவந்துள்ளது.

US Election Swing states

அரிசோனாவில் டொனால்ட் ட்ரம்ப் ஹாரிஸை விட 52.3 சதவீதம் முன்னிலையில் உள்ளார் என அட்லஸ் இன்டெல் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. ஹாரிஸ் 45.8 சதவீதம் பெற்றுள்ளார்.

நெவாடாவில், டிரம்ப் ஹாரிஸை (46 சதவீதம்) விட 51.2 சதவீதம் முன்னிலை பெற்றுள்ளார். வட கரோலினாவில் டிரம்ப் 50.5 சதவீதம் வரை முன்னிலை பெற்றுள்ளார். ஹாரிஸ் 47.1 சதவீதம் பெற்றிருக்கிறார். ஜார்ஜியாவில், ஹாரிஸின் 47.6 சதவீதம் பெற்றிருக்கும் நிலையில் டிரம்ப் 50.1 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறார்.

Latest Videos


Trump leading Harris

மிச்சிகனில், இது டிரம்பிற்கு 49.7 சதவீதமாகவும், ஹாரிஸுக்கு 48.2 சதவீதமாகவும் உள்ளது. பென்சில்வேனியாவில், ட்ரம்புக்கு 49.6 சதவீதமும், ஹாரிஸுக்கு 47.8 சதவீதமும் கணிக்கப்பட்டுள்ளது. விஸ்கான்சினில் டிரம்பிற்கு 49.7 சதவீதம் மற்றும் ஹாரிஸுக்கு 48.6 சதவீதம் என கடும் போட்டி உள்ளது.

US Election 2024

அக்டோபர் 28 முதல் அக்டோபர் 31 வரை 808 அயோவா வாக்காளர்களிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கணப்பில் 3.4 சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பில் பெண்களின் வாக்குகளை அதிகம் பெற்றவராக ஹாரிஸ்  (56%) இருக்கிறார். டிரம்ப் (52%) ஆண்கள் மத்தியில் முன்னணியில் உள்ளார்.

click me!