Published : Nov 06, 2024, 01:27 PM ISTUpdated : Nov 06, 2024, 01:30 PM IST
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் கடும் போட்டிக்கு மத்தியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தோற்கடித்த குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் கடும் போட்டிக்கு மத்தியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தோற்கடித்த குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார்.
24
US Presidential Election Results
இந்த வெற்றியின் மூலம், 47வது அமெரிக்க அதிபாரகப் பதவியேற்கிறார். 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப் இந்த முறை மீண்டும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். ஒரு தோல்விக்குப் பின் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாதனையைப் படைத்துள்ளார்.,
34
Grover Cleveland
இதற்கு முன் இந்த சாதனையைப் படைத்தவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லேண்ட் ஆவார். அவர் 1885 இல் முதல் முறையாக அதிபராகப் பதிவியேற்றார். 1889 வரை பதவியில் இருந்தவர். 4 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் 1893 இல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 1897 வரை அதிபாராகப் பணியாற்றினார்.
44
Trump Speech
தேர்தல் வெற்றிக்குப் பிறகு புளோரிடாவில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்த முறை எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும் என்று கூறினார். அமெரிக்காவின் மேம்மைக்காகக் கடுமையாக உழைக்க இருக்கிறேன் என்றும் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை போராடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். தனக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற வைத்த அமெரிக்க மக்களுக்கும் ட்ரம்ப் நன்றி கூறியுள்ளார்.