ஜனனிக்காக விசாலாட்சி எடுக்கும் ரிஸ்க்; சுத்துபோட்ட போலீஸ்... சிக்கினாரா குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது

Published : Dec 11, 2025, 08:55 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் பிசினஸுக்கு கடைசி நேரத்தில் பணப்பிரச்சனை வர அதற்கு விசாலாட்சி உதவி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி புதிதாக தமிழ் சோறு என்கிற ஃபுட் டிரக் பிசினஸை தொடங்க இருக்கிறார். இதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான ஃபுட் டிரக் ஒன்றையும் வாடகைக்கு எடுத்துள்ளதோடு, சமையலுக்கு தேவையான பொருட்கள், மசாலா ஆகியவற்றை தயார் செய்து வைத்துள்ளார். இதனை பரிசோதிக்க அதிகாரிகளும் வீட்டுக்கு வந்து, அனைத்தையும் சோதனை செய்தனர். அனைத்தும் சரியாக இருப்பதாக கூறி அவர்களுக்கு அனுமதி அளித்திருந்தனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
பணசிக்கலில் ஜனனி

ஜனனியின் பிசினஸுக்கு லைசன்ஸ் வாங்கி கொடுத்த நபர் உடனடியாக 50 ஆயிரம் பணம் கேட்க, அவரிடம் காசு இல்லை என கூறுகிறார் ஜனனி. அதற்கு அந்த நபர், இவ்ளோ பெரிய வீடு வச்சிருக்கீங்க, பிசினஸ் வேற ஆரம்பிக்கிறீங்க, இப்படி கையில காசு இல்லைனு சொல்றீங்க என கேட்க, அதற்கு ஜனனி உண்மையா தான் சார் சொல்றேன். எங்களிடம் இருந்த எல்லா காசையும் வச்சு எல்லாத்தையும் வாங்கி போட்டுட்டோம் சார், எல்லா பணத்தையும் முதலீடு செய்துவிட்டோம். இப்போதைக்கு கொடுப்பதற்கு எங்களிடம் எதுவுமே இல்லை. திடீர்னு 50 ஆயிரம் கேட்டா நாங்க எங்க போவோம் என ஃபீல் பண்ணி பேசுகிறார்.

34
விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த விசாலாட்சி, யப்பா ஒரு நிமிஷம் நில்லு என சொல்லிவிட்டு, ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோரை உள்ளே அழைத்து செல்கிறார். உள்ளே சென்று ஒரு மஞ்சப்பையை எடுத்து வந்து கொடுத்து, இதில் 70 ஆயிரம் பணம் இருக்கிறது. இதை அவனிடம் கொடுத்துவிடுமாறு கூறுகிறார். இது குணசேகரன் பணமாக இருக்குமோ என பயந்து ஜனனி வாங்காமல் நிற்க, அதற்கு விசாலாட்சி, இதெல்லாம் அவனோட பணம் இல்லை, நான் சிறுவயதில் இருந்து சேர்த்த காசு, எங்க செல்லாம போயிடுமோனு அப்பப்போ மாத்தி வச்சிப்பேன் என கூறுகிறார். இதன்பின்னர் அந்த பணத்தை வாங்கிக் கொள்கிறார் ஜனனி.

44
குணசேகரனை விரட்டும் போலீஸ்

மறுபுறம் பாண்டிச்சேரியில் குணசேகரன் தலைமறைவாக இருக்கும் விஷயம் கொற்றவைக்கு தெரியவர, அவர் அவர்களை கைது செய்ய அங்கு விரைகிறார். ஆனால் அதற்கு முன்னர் வக்கீல் இந்த தகவலை குணசேகரனுக்கு சொல்ல, அவர் உடனடியாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். இப்படி போலீசுக்கு பயந்து ஓடுவதால் டென்ஷன் ஆன குணசேகரன், நான் வீட்டை கட்டிவைத்தால், இவளுங்க வந்து பாயை விரித்து படுத்துப்பாளுங்களா... அவளுங்கள வெட்டி எறியப்போறேன் என ஆவேசமாக கூறுகிறார். இதையடுத்து என்ன நடந்தது? போலீஸ் குணசேகரனை கைது செய்ததா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories