பாசத்தை உலுக்கிய துயரங்கள்; பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த சோக சம்பவங்கள்!

Published : Dec 10, 2025, 09:40 PM IST

Pandian Stores 2 Serial Most Shocking Sad Movements : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் குடும்பத்தில் அடுத்தடுத்து சோகமான சம்பவங்கள் நடந்து வருகிறது. அது என்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
17
Pandian Stores 2 Serial Update

பாண்டியன் குடும்பத்தில் அடுத்தடுத்து சோகமான சம்பவங்கள் நடந்து வருகிறது. அது என்ன என்று இந்த தொகுப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம். விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களுக்கு மத்தியில் சும்மா பரபரப்பாக மட்டுமே சென்று கொண்டிருக்கிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் டாப் இடம் கூட பிடிக்காத நிலையில்.

27
Palanivel Gandhimathi Stores

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வாசகத்திற்கு ஏற்ப பாண்டியனின் மூத்த மகனான சரவணன் எப்போது அம்மா, அப்பாவின் பேச்சைக் கேட்டு நடக்கும் ஒரு மகனாக இந்த சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அப்படி வீட்டிற்கு வந்த மூத்த மருமகள் தான் தங்கமயில்.

37
Pandian Stores 2 Serial This Week Promo Video,

பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்த நிலையில் எம் ஏ படித்துள்ளதாக கூறி திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும், 80 சவரன் நகையும் போட்டுள்ளனர். இதில் 8 சவரன் மட்டுமே தங்கம். மற்ற நகைகள் எல்லாம் கவரிங். குடும்ப சூழல் அதிக வயதாகியும் திருமணமாகாத நிலையில் கடைசியாக கடை வைத்திருக்கிறார்கள், நல்ல வசதி என்று நினைத்து தங்கமயிலை திருமணம் செய்து வைத்தார்கள்.

47
Saravanan Shocking Movement

வீட்டில் சொன்ன பொய்யை அப்படியே மெயிண்டைன் பண்ணி வந்துள்ளார். இந்த நிலையில் தான் சரவணனுக்கு எல்லா உண்மையும் தெரியவரவே குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளையும் சரவணன் தனது அப்பா மற்றும் அம்மாவிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து தங்கமயிலை அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கும் முடிவிற்கு பாண்டியன் வந்துள்ளார்.

57
Meena and Senthil New House

இதன் மூலமாக தனது மகனின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்ற எண்ணி நித்தம் நித்தம் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார். இதற்கு முன்னதாக சிறு வயது முதலே தனது வீட்டிலேயே வளர்ந்த கோமதியின் தம்பி பழனிவேல் சொந்தமாக கடை திறந்துள்ளார். இது பாண்டியனுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், அவர் திறந்தது மளிகை கடை என்பதோடு மட்டுமல்லாமல் பாண்டியன் கடை இருக்கும் அதே தெருவில் தான் பழனிவேலுவும் கடை திறந்துள்ளார். இதுதான் பாண்டியனுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

67
Thangamayil and Saravanan Controversies

அதற்கும் முன்னதாக செந்தில் மற்றும் மீனா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனிக்குடித்தனம் சென்றது பாண்டியனுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குடும்பத்தோடு ஒற்றுமையாக மகன்கள், மருமகள்களோடு சந்தோஷமாக வாழ நினைத்த பாண்டியனுக்கு இப்படி அடுத்தடுத்த சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

77
Pandian Stores 2 Serial

அதற்கும் முன்னதாக அரசி தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேல் வீட்டில் குடும்பம் நடத்தியது. அதன் பிறகு அந்த உண்மை தெரிந்து கோர்ட் கேஸ் என்று அழைந்து திரிந்து கடைசியாக அரசி இந்த வழக்கை திரும்ப பெறவே குமரவேல் ஜெயிலுக்கு செல்லாமல் விடுதலையானார். என்னதான் குடும்பத்தில் மூத்தவராக இருந்தாலும் இப்படி அடுத்தடுத்த சோகத்தை எப்படி ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியும் என்பது இன்றைக்கு பலரது கேள்வியாக உள்ளது. சரி, இனிவரும் எபிசோடுகளில் என்னென்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை பார்த்து தெரிந்து கொள்வோம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories