Vinayagar Chaturthi Special : விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 14ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏராளமான புதுப் படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, பார்வையாளர்களை கவரும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்களுடன் களமிறங்குகிறது ஜீ தமிழ். செப்டம்பர் 14-ம் தேதி காலை தொடங்கி இரவு வரை குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. பண்டிகை நாளை சிந்தனையுடனும் சிரிப்புடனும் தொடங்கும் வகையில், காலை 9.30 மணிக்கு பிரபல பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.
“இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தில் பிரச்சனைகள் பெருகுவதற்கு முக்கிய காரணம் பிள்ளைகளா? பெற்றோர்களா?” என்ற சுவாரஸ்யமான தலைப்பை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த பட்டிமன்றத்தில், நகைச்சுவை கலந்த விவாதங்களுடன் குடும்ப உறவுகள் குறித்த சிந்திக்க வைக்கும் கருத்துகளும் இடம்பெற உள்ளன.
பட்டிமன்றத்தைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு ‘டபுள் ஆக்குபன்ஸி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது. சந்தோஷ் ஸ்ரீராம், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகிறது. காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் கற்பனை அம்சங்களை இணைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம், பண்டிகை நாளில் ரசிகர்களுக்கு புதுவிதமான பொழுதுபோக்கு அனுபவத்தை கொடுக்க உள்ளது.
34
மதியம் 3.30 மணிக்கு ‘பரிமளா & கோ’
இதையடுத்து பிற்பகல் 3.30 மணிக்கு ‘பரிமளா & கோ’ திரைப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகிறது. ஜெயராம், ஊர்வசி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தில், நகைச்சுவையுடன் குடும்பப் பாசம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் விநாயகர் சதுர்த்தி நாளின் மதிய பொழுதும் ரசிகர்களுக்கு கலகலப்பாக அமைய உள்ளது.
மேலும், ஜீ தமிழில் வழக்கமாக ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களும் தங்களது வழக்கமான நேரத்தில் தொடர்ந்து ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பட்டிமன்றம், இரண்டு திரைப்படங்களின் உலகத் தொலைக்காட்சி பிரீமியர், பிரபல சீரியல்கள் என முழு நாளையும் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலை தயார் செய்துள்ளது ஜீ தமிழ். இந்த விநாயகர் சதுர்த்தியை சிரிப்புடனும் பொழுதுபோக்குடனும் குடும்பத்துடன் கொண்டாட ஜீ தமிழுடன் இணைந்திருங்கள்!