ரோகிணியை அடிச்சு டார்ச்சர் பண்ணும் விஜயா... கதறி அழும் மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Jan 02, 2026, 08:44 AM IST

சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலை வீட்டை விட்டு காணாமல் போனதால் கடும் கோபத்தில் இருக்கும் விஜயா, தன் மருமகள் ரோகிணியை அடிச்சு டார்ச்சர் பண்ணி இருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் சொத்துப் பிரச்சனை காரணமாக அண்ணாமலை வீட்டை விட்டு காணாமல் போய் இருக்கிறார். மனோஜ் தான் வாங்கிய கடனுக்காக சொத்தை பிரித்து தர வேண்டும் என சொன்னதால், அவருக்கும் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது. சொத்துக்காக இப்படி அடித்துக் கொள்கிறார்களே என மன உளைச்சலில் இருந்த அண்ணாமலை, வீட்டில் லெட்டர் எழுதிவைத்துவிட்டு காணாமல் போகிறார். அண்ணாமலை இருக்கும் இடம் அவரது நண்பர் பரசுவுக்கு தெரியும் என்பதால் அவரை பாலோ பண்ணி சென்றார் முத்து. ஆனால் அண்ணாமலை, பரசுவிடம் சொல்லி அலர்ட் செய்ததால் முத்துவால் அப்பா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
ரோகிணிக்கு ஐடியா கொடுத்த மகேஸ்வரி

அண்ணாமலை வீட்டிற்கு வராத வரை தன்னை விஜயா டார்ச்சர் செய்துவிடுவார், அதனால் எதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்க என தன் தோழி மகேஸ்வரியிடம் ரோகிணி கேட்க, அவரும் உங்க அத்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்தால் அவர் தொல்லை செய்யாமல் இருப்பார் என்று ஒரு பேச்சுக்கு சொல்லம், ரோகிணியும் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு, உன்னிடம் தூக்க மாத்திரை இருந்தால் கொடு என கேட்கிறார். பின்னர் மகேஸ்வரியும், தன்னிடம் இருக்கும் தூக்க மாத்திரையை கொடுத்து அனுப்புகிறார். இதையடுத்து வீட்டுக்கு வரும் ரோகிணியிடம் அத்தைக்கு டீ போட்டு கொடுக்குமாறு சொல்கிறார் ஸ்ருதி.

34
தூக்க மாத்திரையை கலக்கும் ரோகிணி

இதுதான் நல்ல சான்ஸ் என முடிவெடுத்து தன்னிடம் இருந்த மாத்திரையை அந்த டீ-யில் கலந்து கொடுத்துவிடுகிறார் ரோகிணி. அந்த டீ-யை விஜயாவும் குடித்துவிடுகிறார். இதையடுத்து ரோகிணிக்கு மகேஸ்வரியிடம் இருந்து ஃபோன் கால் வருகிறது. அவர், தான் கொடுத்தது தூக்க மாத்திரை இல்லை என்றும், அது விட்டமின் டேப்லெட், அதை சாப்பிட்டால், நன்கு சுறுசுறுப்பாக இருப்பார்கள் என சொல்கிறார். அப்போது ரோகிணி வெளிய வா என அழைக்கும் விஜயா, டீ நல்லாவே இல்லை என திட்டிவிட்டு, மீனாவிடம் பூஜை அறையை சுத்தம் செய்து கோலம் போடுமாறு கூறுகிறார்.

44
விஜயாவிடம் அடிவாங்கும் ரோகிணி

இதையடுத்து அண்ணாமலை வரும் வரை தான் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டே இருப்பேன் என சொல்லும் விஜயா, ரோகிணியையும் தன் அருகில் அமர வைத்துக் கொள்கிறார். ஜெய் காளி என மந்திரம் சொல்லி சொல்லி ரோகிணி தலையில் கொட்டுகிறார். இப்படி ஒவ்வொரு முறை மந்திரம் சொல்லும் போதும் ரோகிணியை அடிக்கிறார் விஜயா. அதுமட்டுமின்றி ரோகிணி கையில் கற்பூரம் ஏற்றி சாமிக்கு காட்டுகிறார். ரோகிணி வலியால் துடித்தும் தொடர்ந்து பூஜை செய்கிறார். இதையடுத்து போன் வந்தது போல் நடித்து, அப்பா காலையில் வந்துவிடுவாராம் என முத்து சொன்னதும் பூஜையை நிறுத்துகிறார் விஜயா.

கடன்காரரால் காத்திருக்கும் அதிர்ச்சி

மறுநாள் காலையில் அண்ணாமலை வருகிறாரா என வாசலையே எட்டி எட்டி பார்க்கும் விஜயா, முத்துவிடம் என்னடா ஆச்சு என கேட்டுக் கொண்டிருக்க, தான் பொய் சொன்னதாக முத்து சொல்ல வரும்போது வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார் அண்ணாமலை. இதையடுத்து விஜயா, கண்ணீர்விட்டு அழுகிறார். இப்படி அண்ணாமலை வந்துவிட்டார் என வீட்டார் நிம்மதியாக இருக்கும் வேளையில், மனோஜுக்கு கடன் கொடுத்த கடன்காரர் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். இதையடுத்து என்ன ஆனது? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories