விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் வருகிற ஜனவரி 19-ந் தேதி முதல் புதிய நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிநடை போட்டு வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வெற்றி வசந்த் ஹீரோவாகவும், கோமதிப்பிரியா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவா, அனிலா, சல்மா அருண், சங்கீதா லியோனிஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த சீரியல் விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் டிஆர்பி ரேஸிலும் சன் டிவி சீரியல்களுக்கே தண்ணிகாட்டி வருகிறது.
24
அனல்பறக்கும் சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ரோகிணி இத்தனை ஆண்டுகளாக தங்களை ஏமாற்றி வந்த விஷயம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியவருகிறது. இந்த உண்மை ஏற்கனவே மீனாவுக்கு தெரிந்திருந்தும் அதை அவர் சொல்லாமல் மூடி மறைத்திருந்தார். அதற்கு காரணமும் ரோகிணி தான். நீ உண்மையை சொன்னால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியதால், மீனா பயந்து உண்மையை சொல்லாமல் மூடி மறைத்து வந்தார். ஆனால் முத்துவுக்கு ரோகிணி பற்றிய உண்மை தெரிந்ததும் அவர் அந்த உண்மையை ரோகிணி வாயாலேயே வரவைத்திருக்கிறார்.
34
காத்திருக்கும் தரமான ட்விஸ்ட்
கல்யாணி தான் ரோகிணி என்றும், இத்தனை நாட்களாக நம்ம வீட்டில் இருக்கும் கிரிஷ், ரோகிணியோட பிள்ளை தான் எனவும், கிரிஷோட பாட்டி தான் ரோகிணியோட அம்மா என்கிற உண்மை அனைத்தையும் முத்து போட்டுடைத்துவிட்டார். இதையடுத்து வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டுள்ளார் ரோகிணி. ஆனால் செல்லும் முன், மீனா தான் இதையெல்லாம் முத்துவிடம் சொல்லி இருப்பார் என நினைத்து அவருக்கு தன்னைப்பற்றிய உண்மை ஏற்கனவே தெரியும் என்பதை போட்டுக்கொடுத்துவிட்டு செல்கிறார். இதன்பின்னர் மீனாவை விஜயா, முத்து ஆகியோர் திட்டிதீர்த்துள்ளனர்.
இதையடுத்து ரோகிணி, முத்து மற்றும் மீனாவை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதனால் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் நேரத்தில் அதிரடி மாற்றம் செய்துள்ளது விஜய் டிவி. இதுவரை இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், வருகிற ஜனவரி 19ந் தேதி முதல் இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணிநேர ஸ்பெஷலாக ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளதால் இந்த அதிரடி மாற்றத்தை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.