விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து ராஜீ கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷாலினி, விளக்குகிறாரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
விஜய் டிவியில் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பான சீரியல் தான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. அண்ணன் - தம்பிகள் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு, ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். டிஆர்பி-யிலும் தொடர்ந்து டாப் 5 இடத்தை கைப்பற்றிய இந்த தொடர், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்தது.
26
பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை:
இதைத்தொடர்ந்து அதே மாதம், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்கிற புது பெயரில் 2-ஆவது பாகம் துவங்கப்பட்டது. முதல் பாகத்தில் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி, இயக்குனர் சிவாசேகர் மற்றும் டேவிட் சார்லி ஆகியோர் இந்த தொடரை இயக்கி இருந்தனர். ஆனால் இரண்டாவது பாகத்தை, ஆரம்பத்தில் ரவி என்பவர் இயக்கி வந்த நிலையில், தற்போது ஐ டேவிட் என்பவர் இயக்கி வருகிறார்.
பிள்ளைகளை கட்டுக்கோப்பாக வளர்க்க ஆசைப்படும் ஒரு தந்தைக்கு பிள்ளைகளால் ஏற்படும் ஏமாற்றம், அதனால் ஏற்படும் வெறுப்பு, அதை மிஞ்சிய பாசம் என உணர்வு பூர்வமான கதைக்களத்தோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் முத்து, இரண்டாவது பாகத்தில் 3 ஆண் பிள்ளைகள் மாற்று 2 பெண் பிள்ளைகளுக்கு அப்பாவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்குமார் மனோகரன், விஜே கதிர்வேல் கந்தசாமி, சரண்யா துரடி, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், ஆகாஷ் பிரேம்குமார், ஷாலினி போன்ற பல நடித்து வருகின்றனர்.
46
அடுத்தடுத்து என்ன நடக்கும்?
இந்த தொடரில், அடுத்தடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்புடன் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் பல வருடமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த பழனி - சுகன்யா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சுகன்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு எதிராக திரும்பி, எதிர் வீட்டில் இருக்கும் சக்திவேல் குடும்பத்திற்கு உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் ஷாலினி இந்த சீரியலை விட்டு விலகுகிறாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு காரணம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் 'கெட்டி மேளம்' சீரியலில் வெற்றி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிபு சூரியனுக்கு பெண் பார்த்து வருகிறார்கள். அவர் பார்க்க போகும் பெண்ணின் கதாபாத்திரம் என ஷாலினியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. எனவே ஷாலினி விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கெட்டிமேளம் சீரியலில் நடிக்கப் போகிறாரா என்கிற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
66
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஷாலினி
அதே நேரம், வெறும் போட்டோ மட்டும்தான் இதில் இடம்பெற்றுள்ளதால், கேமியோ ரோலில் நடிப்பாரார் என சிலர் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இப்போ தான் ராஜி - கதிர் இடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக துவங்கியுள்ளதால், ஷாலினி இந்த தொடரை விட்டு விலக வாய்ப்பே இல்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.