விஜய் டிவியில் காலை முதல் இரவு வரை பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த ஆண்டு தொடங்கப்பட்ட இரண்டு சீரியல்களின் நேரத்தை தற்போது அதிரடியாக மாற்றி உள்ளனர்.
சின்னத்திரையில் சன் டிவிக்கு செம டஃப் கொடுத்து வரும் சேனல் என்றால் அது விஜய் டிவி தான். சன் டிவி கிராமப்புர மக்களின் செல்வாக்கை பெற்றிருந்தாலும் நகரப் பகுதிகளில் விஜய் டிவி தான் கிங் ஆக இருந்து வருகிறது. இதனால் டிஆர்பி ரேஸில் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி சீரியல்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி சில நேரங்களில் சரிவை சந்திக்கும் அதற்கு முக்கிய காரணம், அதன் நேரம் மாற்றம் தான். உதாரணத்திற்கு பாக்கியலட்சுமி சீரியல் நேர மாற்றத்துக்கு பின்னர் டிஆர்பியில் சரிவை சந்தித்ததால் அந்த சீரியலையே இழுத்து மூடிவிட்டனர்.
24
பூங்காற்று திரும்புமா சீரியல் நேரம் மாற்றம்
இந்த நிலையில் தற்போது இரண்டு புத்தம் புது சீரியல்களின் நேரத்தை அதிரடியாக மாற்றி இருக்கிறார். அதில் ஒரு சீரியல், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட பூங்காற்று திரும்புமா சீரியல். ஷோபனா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் முதலில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து இந்த சீரியலின் நேரத்தை மாலை 6 மணிக்கு மாற்றினர். இந்த நேர மாற்றம் நடந்து ஒரு மாதம் மட்டுமே ஆகும் நிலையில், தற்போது இந்த சீரியலை மதிய ஸ்லாட்டுக்கு மாற்றி இருக்கிறார்கள். அதன்படி வருகிற நவம்பர் 17ந் தேதி முதல் பிற்பகல் 3 மணிக்கு பூங்காற்று திரும்புமா சீரியல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
34
மகளே என் மருமகளே சீரியலின் புது டைமிங் என்ன?
அதேபோல் நேரம் மாற்றப்பட்டிருக்கும் மற்றொரு சீரியல், மகளே என் மருமகளே. பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடிப்பில் விஜய் டிவியில் மதிய நேரம் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் மகளே என் மருமகளே. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில், இந்த சீரியலை தற்போது மாலை நேரத்துக்கு மாற்றி உள்ளனர். அதன்படி நவம்பர் 17-ந் தேதி முதல் மகளே என் மருமகளே சீரியல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த நேர மாற்றம் மகளே என் மருமகளே சீரியலுக்கு பலமாக அமைந்துள்ளது. மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு பெரியளவில் டிஆர்பி கிடைக்காது. விறுவிறுப்பான கதைக்களத்துடன் மகளே என் மருமகளே சீரியல் ஒளிபரப்பாகி வருவதால், தற்போது நேர மாற்றத்திற்கு பின் அதன் டிஆர்பி எகிற வாய்ப்பு உள்ளது. அதே வேளையில், மதிய நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ள பூங்காற்று திரும்புமா சீரியலின் டிஆர்பி சரிவை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.