எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தி கடத்தப்பட்ட விவகாரம் தெரிந்ததும் ஜனனி, நேராக ஆதி குணசேகரனிடம் சென்று சண்டை போடுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பிய சக்தியை வரும் வழியில் மடக்கிய கும்பல் ஒன்று அவரை கடத்திச் செல்கிறது. முன்னதாக ஆதி குணசேகரன் தன்னுடைய ஆட்களிடம் சக்தியை தூக்க உத்தரவிட்டிருந்ததோடு, சக்தியிடம் இருக்கும் ஆதாரங்களை எல்லாம் எடுத்துவிட்டு அவனை அனுப்புமாறு கூறி இருந்தார். ஆனால் தற்போது சக்திக்கு சுத்துப்போட்டுள்ள கும்பல், அவரை மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்றிருக்கிறது. இதனால் அது யார் என்கிற குழப்பம் நிலவி வந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ஆபத்தில் சக்தி
சக்தியை கடத்திய கும்பல், ஜனனிக்கு வீடியோ கால் போட்டு சக்தி தலைகீழாக தொங்கவிட்டிருப்பதாக காட்டுகிறார்கள். இதைப்பார்த்து பதறிப்போகும் ஜனனி, விறுவிறுவென கீழே வந்து ஆதி குணசேகரனிடம் சக்தியை என்ன பண்ணீங்க என சட்டையை பிடித்து கேட்கிறார். அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உங்க எல்லாரையும் கொன்றுவேன் என ஆவேசமாக கத்துகிறார் ஜனனி. பின்னர் நந்தினி, தர்ஷன், ரேணுகா ஆகியோர் வந்து ஜனனியை தடுத்து நிறுத்துகிறார்கள். ஜனனி எதற்காக கோபப்படுகிறார் என்று புரியாத விசாலாட்சி, என்ன ஆச்சு டி என கேட்க, அவரிடம் போனை காட்டுகிறார் ஜனனி.
34
நடிக்கும் ஆதி குணசேகரன்
அந்த போனில் சக்தி தலைகீழாக தொங்கவிட்டபடி இருப்பதை பார்த்து பதறிப்போன விசாலாட்சி, தன் மகனுக்கு என்ன ஆச்சு என கேட்டு கண்ணீர்விடுகிறார். இதையடுத்து போனை வாங்கி பார்க்கும் ஆதி குணசேகரன், டேய் சக்தி என்னடா ஆச்சு உனக்கு, ஞானம் என்னடா இது, இங்க பாருடா என போனை கொடுத்துவிட்டு, ஜனனியை பார்த்து, அடிப்பாவிகளா, நான் தான் தலையில அடிச்சு அடிச்சு சொன்னேன்ல டி, அவனை ஊர் ஊரா அனுப்பி வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்காதனு சொன்னேன்ல டி. என் பிள்ளைய எப்படி தொங்கவிட்ருக்கான் பாத்திங்கலா டி என தனக்கு எதுவும் தெரியாதபடி நடிக்கிறார் குணசேகரன்.
இதையெல்லாம் நம்பாத ஜனனி, நடிக்காதய்யா என கத்துகிறார். பின்னர் ஆதி குணசேகரனின் காலில் விழுந்து கதறும் ஜனனி, மாமா தெரியாம பண்ணிட்டேன். அவனை விட்ருங்க மாமா. தெரியாம நான் கோவமா பேசிட்டேன். ப்ளீஸ் மாமா, நாங்க யார்கிட்டையும் எதையும் சொல்ல மாட்டோம். அவனும் யார்கிட்டயும் சொல்ல மாட்டான் என கெஞ்சுகிறார். ஆதி குணசேகரன் தன்னுடைய ஆட்கள் தான் சக்தியை கடத்தி இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சக்தியை கடத்தியது ராணா என்கிற உண்மை இனி தான் உடைய இருக்கிறார். அதன்பின் என்ன ஆகும் என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.