கார்த்திகை தீபம் 2 சீரியலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்தாலும் ஒரு புறம் கார்த்திக் யார் என்ற உண்மையை தீபாவதி கண்டுபிடித்துள்ளார். அதனை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ரொமான்ஸ் காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், யார் அதிக காதல் வைத்திருக்கிறார்கள் என்ற போட்டி கார்த்திக் மற்றும் ரேவதி இருவருக்கும் இடையில் நடந்தது. இதில் சுவாதி தன்னுடைய அக்காவிற்காக சாதகமாக பேசினார். இதே போன்று மயில்வாகனம் தன்னுடைய சகலை கார்த்திக்கிற்காக சாதகமாக பேசினார். இந்த கேமுக்கு பெயர் லவ்வாலஜி கேம் என்று சுவாதி விவரித்தார்.
23
கும்பாபிஷேகம்
கடைசியில் இந்தப் போட்டியில் கார்த்திக் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து மயில்வாகனம் மற்றும் ரோகிணியின் திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகளுக்கு முன் என்ன நடந்தது என்பது பற்றி சாமுண்டீஸ்வரி பிளாஷ்பேக் கொடுத்தார். அதில், ரோகிணியை பெண் பார்க்க வந்த மயில்வாகனத்திடம் சாமுண்டீஸ்வரி அடுக்கடுக்காக பல கண்டிஷன் போட்டார். அதில், வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், வீட்டு வேலைகளை செய்ய வேண்டும், கரண்ட் பில், கோர்ட் கேஸ் போன்றவற்றை கவனித்துக் கொள்ள வேண்டும், பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கண்டிஷன் போட்டார்.
33
கார்த்திக் மற்றும் ரேவதி லவ்வாலஜி கேம்
இதற்கு ஒட்டு மொத்தமாக மயில்வாகனம் சாமுண்டீஸ்வரி காலில் சாஸ்டாங்கமாக விழுந்து எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்தார். அதன் பிறகு தான் மயில்வாகனம் மற்றும் ரோகிணி திருமணம் நடைபெற்றது. இதை சாமுண்டீஸ்வரி சொல்லவே அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். அடுத்த காட்சியாக கார்த்திக் தன் மீது எந்தளவிற்கு காதல் வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட ரேவதி, கும்பாபிஷேகத்திற்கு பிறகு ஹனிமூன் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். அங்கு, மலை மேகங்களுக்கு நடுவில் இருவரும் ஒன்றாக நீண்ட தூரம் நடக்க வேண்டும், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்து பேச வேண்டும் என்று இப்படி பல ஆசைகளை ரேவதி கார்த்திக்கிடம் கூறினார்.