அய்யனார் துணை சீரியலில் நிலா வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு ரெடியாகிய நிலையில், அதில் கலந்துகொள்ள வானதியும் வருகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், பொங்கல் கொண்டாட்டம் களைக்கட்டத் தொடங்கி உள்ளது. வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக நிலா எல்லோரையும் அழைக்கிறார். பொங்கல் பானையை வாசலில் வரைய முடிவெடுத்திருக்கிறார் நிலா. அதற்காக மொபைலில் என்ன மாடலில் கோலம் போடலாம் என தேடிவிட்டு, அந்த கோலத்தை பேப்பரில் போட்டு பார்க்கிறார். அதன்பின்னர் அந்த கோலத்தை வீட்டு வாசலில் வரைகிறார். அதைப்பார்த்த சோழன், இது பொங்கல் பானை மாதிரி இல்லை தண்ணி வைக்குற பானை மாதிரி இருக்கு என கிண்டலடிக்கிறார்.
25
களைகட்டும் பொங்கல் கொண்டாட்டம்
சோழன் கிண்டலடித்தாலும் எப்படியோ ஒரு வழியாக பொங்கல் பானை, கரும்பு என எல்லாவற்றையும் வரைந்துவிடுகிறார் நிலா. அதன்பின்னர் எல்லோரையும் அழைத்து கலர் கொடுக்க சொல்கிறார். கோலம் போட்டு முடித்ததும் எல்லோரையும் தூங்க சொல்லும் நிலா, காலையில் 5 மணிக்கெல்லாம் எல்லோரும் எழுந்துவிட வேண்டும். சூரியன் உதயமாகும் முன்னர் நாம் சாமி கும்பிட வேண்டும். அதனால் எல்லோருமே சீக்கிரமே எழுந்து ரெடியாக வேண்டும் என சொல்கிறார். அதற்கு ஓகே சொல்லிவிட்டு சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் தூங்கச் செல்கிறார்கள்.
35
முதல் ஆளாக ரெடியான நிலா
சொன்னபடியே காலையில் முதல் ஆளாக எழுந்துவிடுகிறார் நிலா. அதன்பின்னர் சேரனை எழுப்பிவிடுகிறார். அவரும் எழுகிறார். பின்னர் சோழன், பாண்டியன், பல்லவனை எழுப்புகிறார். இதில் பாண்டியன் மட்டும் எழுகிறார். ஆனால் சோழன் மற்றும் பல்லவன், எழாமல் தூங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்குள் சேரன் குளித்துவிட்டு ரெடியாகிறார். அதன்பின்னர் சோழன் மற்றும் பல்லவனிடம் நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள நீங்க எழுந்திரிக்கணும் என சொல்லிவிட்டு செல்கிறார் நிலா. ஆனால் அவர் குளித்துவிட்டு வந்து பார்த்தால் அவர்கள் இருவரும் நன்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் டென்ஷன் ஆகும் நிலா, ஒரு சொம்பில் தண்ணியை எடுத்து வந்து இருவர் மீது ஊற்றுகிறார். உடனே இருவரும் பதறியடித்து எழுகிறார்கள். உங்க ரெண்டு பேருக்கும் 10 நிமிஷம் தான் டைம் அதற்குள் இருவரும் எழுந்திரிக்கணும் என சொல்கிறார் நிலா. பொங்கல் ஸ்பெஷலாக ஆண்கள் அனைவரும் வேட்டி சட்டையும், நிலா சேலையும் அணிந்திருக்கிறார். இவர்கள் பொங்கல் வைப்பதற்கு ரெடியாகிவிட, மறுபுறம் வானதி அவரது வீட்டில் குளிச்சிட்டு ரெடியாகி, அவரின் அம்மாவிடம், நான் பாண்டியன் வீட்டுக்கு போறேன். அவங்க வீட்டுல பொங்கல் வைக்க போறாங்களாம் என சொல்கிறார்.
55
அடுத்த பிரச்சனை என்ன?
அப்புறம் இங்கமட்டும் என்ன பொங்கல் வைக்காமலா இருக்கோம் என அம்மா கேட்க, அதற்கு வானதி, முதல்முறையா பாண்டியன் என்னை கூப்பிட்டிருக்கான் அதனால் நான் போயிட்டு வந்திடுறேன் என சொல்லிக் கொண்டிருக்க, வானதியின் அண்ணன், அதெல்லாம் நீ அங்க போகக் கூடாது என முட்டுக்கட்டை போடுகிறார். அதன்பின்னர் வானதியின் அப்பா, அவரின் அண்ணனை அடக்குகிறார். இவ அடங்கமாட்டா இவளை அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடலாம் என வீட்டில் பேச்சு அடிபட்டதும் வானதி குஷியாகிறார். இதையடுத்து பாண்டியன் வீட்டுக்கு சென்று என்னென்ன பிரச்சனையெல்லாம் செய்யப்போகிறார் வானதி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.