TRP ratings: தலைகீழாக மாறிய டிஆர்பி ராஜ்ஜியம்.! விஜய் டிவி கோட்டையில் ஓட்டை?! ஜீ தமிழ் சீரியல்கள் செய்த மேஜிக்!

Published : Jan 25, 2026, 10:01 AM IST

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஜீ தமிழ் சீரியல் டாப் 10-க்குள் நுழைந்த நிலையில், விஜய் டிவி சீரியல்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. சன் டிவியின் 'மூன்று முடிச்சு' சீரியல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

PREV
16
மாற்றம் முன்னேற்றம் டிஆர்பி.!

சின்னத்திரை உலகில் ராஜாங்கம் நடத்தி வரும் சீரியல்களுக்கு இடையே நிலவும் டி.ஆர்.பி (TRP) யுத்தம் இந்த வாரம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வழக்கமாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே தான் போட்டி இருக்கும். ஆனால், இந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜீ தமிழ் சீரியல் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், விஜய் டிவி சீரியல்கள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26
விஜய் டிவியின் சறுக்கல்; ஜீ தமிழின் மாஸ் என்ட்ரி!

கடந்த வாரம் வரை டாப் 10 பட்டியலில் 10-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் 'சின்ன மருமகள்' இம்முறை வெளியேறியுள்ளது. அந்த இடத்தை ஜீ தமிழின் 'கார்த்திகை தீபம்' சீரியல் 5.44 புள்ளிகளுடன் தட்டிப் பறித்துள்ளது. இதன் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு டாப் 10 பட்டியலில் ஜீ தமிழ் தடம் பதித்துள்ளது. மறுபுறம், விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் அனைத்தும் வரிசையாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன:

36
கீழே இறங்கிய டிஆர்பி ரேட்டீங்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த இந்தத் தொடர், இந்த வாரம் 6.88 புள்ளிகளுடன் 9-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

அய்யனார் துணை

கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 7.5 புள்ளிகளுடன் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

சிறகடிக்க ஆசை

ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலான இது, கடந்த வாரம் 3-வது இடத்தில் இருந்தது. ஆனால், இந்த வாரம் 7.75 புள்ளிகளை மட்டுமே பெற்று 7-வது இடத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், டாப் 6 இடங்களுக்குள் விஜய் டிவியின் ஒரு சீரியல் கூட இந்த வாரம் இடம் பெறவில்லை.

46
சன் டிவியின் அதிரடி முன்னேற்றம்

விஜய் டிவி சரிந்த அதே வேளையில், சன் டிவியின் சீரியல்கள் ரேட்டிங்கில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன. குறிப்பாக:

அன்னம்

9-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்கு (7.74 புள்ளிகள்) முன்னேறியுள்ளது.

எதிர்நீச்சல் தொடர்கிறது: 8-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு (7.92 புள்ளிகள்) உயர்ந்து அசத்தியுள்ளது.

மருமகள்: 7-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு (8.37 புள்ளிகள்) முன்னேறியுள்ளது.

கயல்: 6-வது இடத்திலிருந்து 3-வது இடத்திற்கு (8.75 புள்ளிகள்) முன்னேறி டாப் 3-க்குள் நுழைந்துள்ளது.

56
முதலிடத்தில் பெரிய ட்விஸ்ட்!

வாராவாரம் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் 'சிங்கப்பெண்ணே' சீரியலுக்கு இந்த வாரம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 9.30 புள்ளிகளுடன் அது இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. கடந்த வாரம் இரண்டாம் இடத்தில் இருந்த 'மூன்று முடிச்சு' சீரியல், இந்த வாரம் 9.65 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

66
அடுத்த வாரமும் ஆரவாரமாதான் இருக்கும்.!

மொத்தத்தில், இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவி சீரியல்களின் இந்த வீழ்ச்சி தற்காலிகமானதா அல்லது ஜீ தமிழின் வருகை இன்னும் வேகமெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories