குண்டாஸ் கேன்சல்... மீண்டும் கோதாவில் இறங்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் செம ட்விஸ்ட்

Published : Jan 24, 2026, 01:32 PM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரன் மீதான குண்டாஸ் கேன்சல் ஆகி இருப்பதாக வக்கீல் கூறி இருக்கிறார். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணும் கதிர், தன் மகள் தாராவை பிடித்து வைத்துக் கொண்டு நந்தினியை மிரட்டுகிறார். தங்கள் பேச்சைக் கேட்டு வீட்டிலேயே இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை, பேச்சைமீறி வெளியே போனால் டைவர்ஸ் பண்ணிடுவேன் என கூறுகிறார். போலீசை அழைத்து வந்து மகளை அழைத்து செல்கிறேன் என சொல்லி வெளியே சென்றுள்ளார் நந்தினி. அதன்பின்னர் அங்கு வரும் ரேணுகா, தன் பங்கிற்கு ஞானத்திடம் சண்டை போட்டுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
கதிரை வெளுத்துவாங்கிய ரேணுகா

இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்க முடிவெடுக்கும் நந்தினியை தடுத்து நிறுத்தும் ரேணுகா. உள்ளே சென்று பேசிப்பார்ப்போம் என அழைத்து சென்று, தாராவை வெளியே அனுப்ப சொல்கிறார். அதற்கு கதிர், அவள் என்னுடைய மகள், நான் என்ன வேணும்னா பண்ணுவேன் என சொல்ல, அவளை வெளிய விடுவியா மாட்டியா என நந்தினி கேட்க, பேசாம போறியா இல்லை உன்னை இங்கயே கண்டந்துண்டமா வெட்டிப் போட்ருவேன் என மிரட்டுகிறார். அதைக்கேட்டு கடுப்பான ரேணுகா, சரியான ஆம்பளையா இருந்தா வெட்டுடா என சொல்ல, கதிரும் கோபத்தில் அரிவாளை எடுத்து வெட்ட வருகிறார். அதை ஞானம் தடுத்துவிடுகிறார்.

34
அதிரடி முடிவெடுக்கும் தாரா

பின்னர் தாராவை வெளிய விடுனு பிரச்சனை பண்ணும் நந்தினி, தாரா அடைத்து வைக்கப்பட்டுள்ள அறையை திறக்க முயல, அவரை தடுத்து நிறுத்துகிறார் கதிர். பின்னர் உள்ளிருந்து வெளியே ஓடி வரும் தாரா, தன்னுடைய அம்மாவை வந்து கட்டிப்பிடித்து அழுகிறார். அப்போது என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடுமா என அழுகிறார். அதன்பின்னர் கதிர் பிரச்சனை பண்ண, நந்தினிக்கும், கதிருக்கும் இடையே கைகலப்பு ஆகிறது. இதனால் அதிரடி முடிவெடுக்கும் தாரா, நான் எங்கும் போகமாட்டேன், நீ போய் டைவர்ஸ் வாங்கிட்டு வந்து என்னை கூட்டிட்டு போ என கூறுகிறார் தாரா.

44
ஜாமினில் வருகிறார் ஆதி குணசேகரன்

அப்போது ஞானத்துக்கு ஒரு போன் கால் வருகிறது. வக்கீல் தான் போன் போடுகிறார். அதை எடுத்து பேசும் ஞானத்திடம், உங்க அண்ணனுக்கு நாளைக்கு குண்டாஸ் ரத்தாகிவிடும் என கூறுகிறார். அது ரத்தானதும் அவருக்கு ஜாமின் கிடைத்துவிடும் என சொல்கிறார். அதைக் கேட்ட நந்தினியும், ரேணுகாவும் ஷாக் ஆகிறார்கள். இந்த தகவலை கேட்ட கதிர், அறிவுக்கரசி மற்றும் முல்லை ஆகியோர் ஜாலியாக கொண்டாடுகிறார்கள். பின்னர் இந்த விஷயத்தை ஜனனிக்கு போன் போட்டு சொல்கிறார் நந்தினி. உடனே ஜனனி, கொற்றவைக்கு போன் போட்டு பேசுகிறார். அவரும் குண்டாஸ் கேன்சல் ஆன விஷயத்தை கூறுகிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது? ஆதி குணசேகரனின் எண்ட்ரியால் என்னென்ன சம்பவங்கள் அரங்கேறப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories