அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் லிஸ்ட் இதோ

Published : Mar 06, 2026, 03:57 PM IST

2026ம் ஆண்டின் 8-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி உள்ளது. இதில் எந்தெந்த சீரியல் இடம்பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Top 10 Tamil Serial TRP Rating

சின்னத்திரையில் சீரியல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தற்போது படங்களைக் காட்டிலும் சீரியல்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக விடுமுறை நாட்களிலும் தற்போது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். சன் டிவி வாரத்தில் ஏழு நாட்களும் சீரியல்களை ஒளிபரப்புகிறது. இதுதவிர மகா சங்கமம், மெகா சங்கமம் என இரண்டு, மூன்று சீரியல்களை ஒரே கதைக்களத்திற்குள் கொண்டுவந்து, அதனை ஒரு சினிமா படம் போலவும் ஒளிபரப்பி வருகின்றனர். இந்த நிலையில் 2026-ம் ஆண்டின் 8-வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ளது.

24
டாப் 10 தமிழ் சீரியல்

அதன்படி இந்த வாரம் 10வது இடத்தில் கார்த்திகை தீபம் சீரியல் உள்ளது. அந்த சீரியலுக்கு 5.11 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதையடுத்து 9-ம் இடத்தில் சின்ன மருமகள் சீரியல் உள்ளது. அந்த சீரியலுக்கு 5.49 டிஆர்பி மட்டுமே கிடைத்துள்ளது. 8-வது இடம் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு கிடைத்துள்ளது. கடந்த வாரம் 6.49 புள்ளிகளை பெற்றிருந்த அந்த சீரியல் இந்த வாரம் 6.00 டிஆர்பி ரேட்டிங்கை மட்டுமே பெற்றிருக்கிறது. இதையடுத்து 7-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உள்ளது. விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான இதற்கு 6.50 டிஆர்பி கிடைத்துள்ளது.

34
டிஆர்பி ரேட்டிங்

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை அன்னம் சீரியல் தக்கவைத்து உள்ளது. அந்த சீரியல் கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. அதற்கு 6.90 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து 5வது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. 7.50 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் சற்று சரிவை சந்தித்து வெறும் 6.92 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. கடந்த வாரம் மூன்றாம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 7.85 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தில் உள்ளது.

44
முதலிடம் பிடித்த சீரியல் எது?

கடந்த வாரம் கயல் - மருமகள் மகா சங்கமம் நான்காம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 3ம் இடத்துக்கு தாவி இருக்கிறது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 7.66 புள்ளிகள் மட்டுமே கிடைத்திருந்த நிலையில், இந்த வாரம் 7.95 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை அய்யனார் துணை சீரியல் பிடித்துள்ளது. கடந்தவாரத்தை விட கம்மியான அளவு டிஆர்பியை பெற்றுள்ள இந்த சீரியலுக்கு 7.96 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த பட்டியலில் முதலிடத்தில் மூன்று முடிச்சு சீரியல் உள்ளது. அதற்கு 9.24 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories