
நடிகர் மதன் பாண்டியன் மற்றும் ரேஷ்மா முரளிதரன் இருவரும் பூவே பூச்சூடவா என்னும் சீரியலில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களது காதல் கதை மிகவும் சுவாரசியமாக இருக்கும். இவர் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் என்னும் கல்லூரி கதையில் முதல்முறையாக தமிழ் சினிமா துறையில் அறிமுகம் ஆகிறார். கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்று அவ்வபோது படத்திலும் நடித்து வந்திருக்கிறார். பொறியியல் படிப்பு படித்து பட்டதாரியாக வெளியேறுகிறார்.
2015 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடத்தி வந்தார் இந்த படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த அன்பார்ந்தவன் அசராதவன் அடங்காதவன் இன்னும் படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் துறையில் கால் பதித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய பூவே பூச்சூடவா என்னும் சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இந்த சீரியல்தான் இவரது வாழ்க்கை துணையை கொடுத்தது என்றே சொல்லலாம்.
கேரளாவை சேர்ந்த ரேஷ்மா முரளிதரன், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல்முறையாக டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். இவர் ஒரு உடை வடிவமைப்பாளராக படித்திருந்து பணியாற்றி வந்திருக்கிறார்.2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்று டான்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுக் கொண்டிருக்கும் போதே' பூவே பூச்சூடவா' என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் இவருக்கு ரசிகர் பட்டாளத்தையே ரசிகர்களை வாரிக் குவித்தது.அந்த சீரியலைத் தொடர்ந்து, கலர்ஸ் தமிழில் சேனலில், 'அபி டெய்லர்' என்ற சீரியலில் நடித்தார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய பூவே பூச்சூடவா என்னும் சீரியலில் இவர்கள் இருவரும் நடித்தார்கள். மூன்று அக்கா தங்கைகள் இருக்கும் நாடகமாக இது கதை அமர்ந்திருக்கும். அதில் இரண்டாவது பெண்ணாக ரேஷ்மா கதாபாத்திரம். ரேஷ்மாவிற்கு ஒரு அக்கா இருப்பார் அவரது கணவர் தான் அதன் பண்டியன். இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்களாம். இவர்கள் இருவருக்கும் எதிர்பாராத விஷயங்கள் அடிக்கடி நடப்பதாகவும் சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக மதன் பாண்டியன் மதுரைக்கு கிளம்பி விமான நிலையத்துக்கு சென்றால் எதிர்பாராத விதமாக ரேஷ்மா முரளிதரனும் விமான நிலையத்துக்கு வருவாராம் அந்த மாதிரியான எதிர்பாதரா தான் விஷயங்கள் இவர்களுக்கு அடிக்கடி நடக்குமாம் இவர்களுக்கு எண்ணம் ஒரே போல் இருப்பதாலும் இவர்கள் அடிக்கடி பேசிக் கொண்டபடியே இருந்திருக்கிறார்கள் அப்படியே இவர்களின் காதல் இந்த சீரியலிலே மலர்ந்திருக்கிறது.
அதன் பிறகு அந்த சீரியலையே இருவரும் காதலித்து விட்டனர். இருவரும் அங்கும் இங்கும் சென்று போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்திருக்கின்றனர். அவ்வப்போது பூவே பூச்சூடவா சீரியல் பாட்டில் காதல் பாடலுக்கு ரீல்ஸ் செய்தும் பதிவிட்டு வந்துள்ளனர். அதனைப் பார்த்து நெட்டிசன்கள் கண்டுபிடித்து அப்போது இருந்தே சிறு கிசுகிசுகள் மூலம் வெளிவந்துள்ளது. குடும்பத்திற்கு தெரிய வந்த காதல் கதை: ரேஷ்மாவின் நெருங்கிய நண்பரான சைத்ரா ரெட்டி திருமணம் நடைபெற்றது. அப்பொழுது ரேஷ்மா அந்த திருமணத்தில் இருந்திருக்கிறார் அப்பொழுது இவர்களுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக மதன்பாண்டியன் திருமணத்திற்கு வந்திருக்கின்றார். ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் இருவரும் ஒன்றாக நின்று போட்டோக்கள் எடுத்தீர்கிறார்கள். அந்த போட்டோவ சைத்ரா ரெட்டி தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து ரேஷ்மாவின் அம்மா கண்டுபிடித்துள்ளார். இவர்களது காதல் ரேஷ்மாவின் அம்மாவிற்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகு ரேஷ்மாவின் காதல் வீட்டிற்கு தெரிந்து இருவருவது பெற்றோரும் சேர்ந்து பேசி திருமணத்தில் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே இவர்களது லவ் ஸ்டோரி என்று சொல்லப்படுகிறது.
காதல் தெரிய வந்த பிறகும் இருவரும் சேர்ந்து கலர்ஸ் தமிழ் சேனலில் அபி டெய்லர் என்னும் சீரியலில் ஒன்றாக நடித்தனர் இவர்களது காதல் இங்கு அதிகாரபூர்வமாக தெரியவந்தது அதன் பிறகு ஒரு நேர்காணலில் இவர்களிடம் உங்களது திருமணம் எப்பொழுது என்று கேட்க விரைவில் சொல்கிறேன் என்று சொல்லி உள்ளனர். அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது இவர்கள் இருவரும் சினிமா துறையில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றனர்.