பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?

Published : Dec 07, 2025, 03:00 PM IST

Thangamayil is chased out of house : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலைப் பற்றிய பாதி உண்மை தெரிந்ததற்கே அவர் இப்போது வீட்டை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார். அப்போ மீதியும் தெரிந்தால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

PREV
16
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலைப் பற்றிய எல்லா உண்மைகளையும் சரவணன் சொல்லிவிட்டார். ஆனால், அவர் சொல்லியது பாதி தான். அதாவது ங்கமயில் என்ன படித்திருக்கிறார், எங்கு வேலைக்கு சேர்ந்தார், அவரது கல்லூரி என்ன, ஆதார் கார்டு, அவருடைய வயசு என்று எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டார். இதில் அவர் சொன்னது பாதி தான். மீதி எது என்றால் பாண்டியன் கடையிலிருந்து தங்கமயிலின் அப்பா மூட்டை மூட்டையாக சாமான்களை எடுத்துச் சென்றது, மேலும், கள்ளாப்பெட்டியிலிருந்து ரூ.500, ரூ.1000 என்று பணத்தை எடுத்துச் சென்றது தெரிந்தால் என்ன நடக்கும்? அவ்வளவு தான்ல.

26
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு வெளியேற்றப்படும் தங்கமயில்

பாதி உண்மை தெரிந்ததற்கே பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுடன் சேர்ந்து குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இப்படி எல்லா உண்மைகளும் தெரிந்த பிறகு பாண்டியன் என்ன செய்வார், அவரது ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்பது எல்லோரது கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் என்ன நடக்கும் என்பது பற்றிய புரோமோ வீடியோவை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

36
மகள் எம் ஏ வரை படித்திருக்கிறார்

அதில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளையும் தெரிந்த பாண்டியன் முதலில் அவரது அப்பா, அம்மாவை வரச்சொல்கிறார். அவர்களும் வருகிறார்கள். பின்னர் அவர்களிடம் மயில் என்ன படித்திருக்கிறார் என்று விசாரிக்கிறார்கள். அதில், மாணிக்கம் என்னுடைய மகள் எம் ஏ வரை படித்திருக்கிறார் என்று பெருமையாக பேச சரவணன் ஆத்திரத்தில் அண்டாவை தூக்கி அடிக்க போனார்.

46
12ஆம் வகுப்பு

அப்போது உங்களது மகள் 12ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார் என்ற உண்மை எங்க எல்லோருக்கும் தெரியும். மேலும், சரவணனை விட 2 வயது சிறியவள் என்பது கூட தெரியும். இப்படி பிராடு குடும்பமாக இருக்கிறீர்கள். பொய் சொல்லி எங்க எல்லோரையும் ஏமாற்றிவிட்டீர்கள். இதையெல்லாம் கேட்டு கதறி அழுத தங்கமயிலிடம் உன்னால் என்னுடைய மகன் பட்ட கஷ்டம் எல்லாம் போதும், மயிலை உங்க வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போங்க என்று பாண்டியன் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இதைக் கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?

56
தங்கமயிலைப் பற்றிய உண்மை

தங்கமயிலைப் பற்றிய உண்மைகளை சொல்லும் போது செந்தில், மீனா மற்றும் பாண்டியனின் மூத்த மகள் குழலி என்று யாருமே இல்லை. ஆனால், இப்போது சண்டை, பஞ்சாயத்து என்று ஒன்று வந்தவுடன் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள். மேலும், மாணிக்கம் தங்களது கடையில் எடுத்த பணத்தை பற்றி சரவணன் இன்னும் உண்மையை சொல்லவிலை. இதே போன்று ராஜீ மற்றும் மீனா இருவரும் நகை மேட்டர் பற்றியும் இன்னும் சொல்லவில்லை.

66
திருமணத்தில் 80 சவரன் நகை

திருமணத்தில் 80 சவரன் நகை போடுகிறோம் என்று சொல்லி வெறும் 8 சவரன் நகையை மட்டுமே தங்க நகையாக போட்டுவிட்டு மீதமுள்ள 72 சவரன நகைகள் எல்லாவற்றையும் கவரிங் நகையாக போட்டனர். இந்த உண்மை குடும்பத்தில் உள்ள ராஜீ மற்றும் மீனாவிற்கு மட்டும் தெரியும். தங்கமயிலைப் பற்றிய பாதி உண்மைக்கே இப்போது அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். மீதி உண்மை தெரிந்தால் அவ்வளவு தான். தங்கமயிலை விவாகரத்து தான் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பது பற்றி இனி வரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories