Pandian Stores 2 Serial This Week Promo Video: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சிரீயலில் இந்த வாரம் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் என்ன நடக்கும் என்பது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் குடும்பத்தில் பூகம்பம் வெடித்துள்ளது. நீண்ட நாள் போரட்டம், கஷ்டம், அவமானம், வலி வேதனைகளை கடந்து தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளையும் சரவணன் தனது அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டார். தங்கமயில் என்ன படித்திருக்கிறார், எங்கு வேலைக்கு சேர்ந்தார், அவரது கல்லூரி என்ன, ஆதார் கார்டு, அவருடைய வயசு என்று எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டார்.
26
மாணிக்கம் மற்றும் பாக்கியம்
இதைக் கேட்டு பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுடன் சேர்ந்து குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இப்படி எல்லா உண்மைகளும் தெரிந்த பிறகு பாண்டியன் என்ன செய்வார், அவரது ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பது எல்லோரது கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் என்ன நடக்கும் என்பது பற்றிய புரோமோ வீடியோவை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
36
தங்கமயில் எம் ஏ வரை படித்திருக்கிறார்
அதில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளையும் தெரிந்த பாண்டியன் முதலில் அவரது அப்பா, அம்மாவை வரச்சொல்கிறார். அவர்களும் வருகிறார்கள். பின்னர் அவர்களிடம் மயில் என்ன படித்திருக்கிறார் என்று விசாரிக்கிறார்கள். அதில், மாணிக்கம் என்னுடைய மகள் எம் ஏ வரை படித்திருக்கிறார் என்று பெருமையாக பேச சரவணன் ஆத்திரத்தில் அண்டாவை தூக்கி அடிக்க போனார்.
46
குழலியின் சண்டை
அப்போது உங்களது மகள் 12ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார் என்ற உண்மை எங்க எல்லோருக்கும் தெரியும். மேலும், சரவணனை விட 2 வயது சிறியவள் என்பது கூட தெரியும். இப்படி பிராடு குடும்பமாக இருக்கிறீர்கள். பொய் சொல்லி எங்க எல்லோரையும் ஏமாற்றிவிட்டீர்கள். இதையெல்லாம் கேட்டு கதறி அழுத தங்கமயிலிடம் உன்னால் என்னுடைய மகன் பட்ட கஷ்டம் எல்லாம் போதும், மயிலை உங்க வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போங்க என்று பாண்டியன் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இதைக் கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
56
பிராடு குடும்பம்
தங்கமயிலைப் பற்றிய உண்மைகளை சொல்லும் போது செந்தில், மீனா மற்றும் பாண்டியனின் மூத்த மகள் குழலி என்று யாருமே இல்லை. ஆனால், இப்போது சண்டை, பஞ்சாயத்து என்று ஒன்று வந்தவுடன் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள். மேலும், மாணிக்கம் தங்களது கடையில் எடுத்த பணத்தை பற்றி சரவணன் இன்னும் உண்மையை சொல்லவிலை.
66
ராஜீ மீனாவிற்கு தெரிந்த உண்மை
இதே போன்று ராஜீ மற்றும் மீனா இருவரும் நகை மேட்டர் பற்றியும் இன்னும் சொல்லவில்லை. திருமணத்தில் 80 சவரன் நகை போடுகிறோம் என்று சொல்லி வெறும் 8 சவரன் நகையை மட்டுமே தங்க நகையாக போட்டுவிட்டு மீதமுள்ள 72 சவரன நகைகள் எல்லாவற்றையும் கவரிங் நகையாக போட்டனர். இந்த உண்மை குடும்பத்தில் உள்ள ராஜீ மற்றும் மீனாவிற்கு மட்டும் தெரியும். இந்த உண்மை குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு தெரிந்தால் என்ன நடக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.