இதைத் தொடர்ந்து கதிர் டான்ஸ் போட்டியில் பங்கேற்க அனுமதி கொடுக்காத நிலையில் ராஜீ நேரடியாக சென்று பாண்டியனிடம் தான் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறிவிட்டார். எதில் கலந்து கொள்ள போகிற என்று கோமதி வந்து பார்த்து கேட்க அவருடன் வந்த தங்கமயிலும் ஓ நான் சொன்ன விளம்பரமா, இதில் கலந்து கொள்ள போறயா சூப்பர் என்று பாராட்ட, அப்போது தான் டோஸ் வாங்கியிருக்கும் தங்கமயில் சும்மா இருக்க வேண்டியது தானே, தேவையில்லாமல் மூக்கை நுழைத்து கோமதியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். இறுதியாக கதிர் மற்றும் பாண்டியனிடம் அனுமதி கேட்டும் கிடைக்காத ராஜீ டான்ஸ் போட்டியில் பங்கேற்றாரா இல்லையா என்பது பற்றி நாளைய எபிசோடில் பார்க்கலாம்.