முன்பு மீனா தான் ராஜீயை தூண்டிவிட இப்போது நீ ஆரம்பித்துவிட்டாயா என்று திட்டினார். இந்தப் போட்டி சென்னையில் நடக்கும் நிலையில் நீ அங்கு சென்று கலந்து கொள்ள விரும்புகிறாயா? என்று பாண்டியன் கேட்க, அதற்கு ஓ முன்னாடி அம்பாசமுத்திரத்தில் கலந்து கொண்டு பைக் ஜெயிச்ச, இப்போ என்ன சென்னையா? அடுத்து மும்பை, டெல்லி எங்க என்று கோமதி கேட்டார். உங்க வீட்டில் எப்போது சான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீ ஒன்றும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம், நீ படித்து போலீஸ் ஆக வேண்டிய வேலையை மட்டும் பாரு என்று பாண்டியன் சொல்லிவிட்டார்.