
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி திருமணம் நடத்தலாம் என்பது தான் காலப்போக்கில் ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்று மாறிவிட்டது. ஆனால், இங்கு 2, 3 பொய் சொன்னதுக்கே வீட்டை விட்டு துரத்திவிட்டார்கள். இன்னும், 997 பொய் சொன்னால் நிலைமை என்னாகும் என்று யோசிக்க தோன்றுகிறது. ஆம், அது என்ன என்று பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கணவன் மனைவி பிரச்சனை குடும்ப பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதில் எதிர்வீட்டுக்காரன் வேறு வந்து இடையில் மூக்கை நுழைக்க அவரும் வாங்கிக் கட்டிக் கொண்டார். தங்கமயில் எம் ஏ படித்திருக்கிறார். அதுவும் யுனிவர்சிட்டி கோல்டு மெடல் என்று சொன்னது முதல் தவறு. 2ஆவது அவர் சரவணனை விட 2 வயது சிறியவர். சரி, திருமணத்திற்கு முன் தான் இப்படி பொய் சொல்லி திருமணம் செய்து வைத்தார்கள். அதன் பிறகாவது தங்கமயில் தனது கணவரிடம் படித்த படிப்பு, வயது ஆகியவற்றை பற்றி சொல்லியிருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது.
ஆனால், இங்கு பொய் சொன்னது மட்டுமின்றி அந்த பொய்யை மறைக்க சரவணன் தன்னை அடித்து துன்புறுத்துகிறார், அவருக்கு என்னை பிடிக்கவில்லை, வேறொரு பெண்ணை பிடித்திருக்கிறது என்று வாய்க்கூசாமல் அடுக்கடுக்காக பொய்களை அள்ளிவிட்டார். இதனால் சரவணன் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டார். எப்படியோ அவர் உண்மையை கண்டுபிடிக்கவே தங்கமயிலின் வாழ்க்கை திண்டாட்டமானது.
இப்போது வீட்டைவிட்டு துரத்தப்பட்டுள்ளார். அப்போது கூட வீட்டிற்குள் இருக்கும் வரையில் ஒரு நாடகமாடிய பாக்கியம் மற்றும் மாணிக்கம், வீட்டிற்கு வெளியில் வந்த பிறகு ஊர்க்காரர்கள் முன்பு வேற மாதிரியான நாடகத்தை அரங்கேற்றினார்கள். கடைசியாக ஊர்க்காரர்கள் முன்பு குழலி தான் எல்லா உண்மைகளையும் சொல்லவே தங்கமயில் குடும்பத்தின் யோக்கியம் தெரிந்தது. அதுவரையில் பாண்டியன் குடும்பத்தை தவறாக எண்ணிக்கொண்டிருந்த ஊர்க்காரர்கள் இப்படியொரு குடும்பமா என்று பாக்கியம் குடும்பத்தை விமர்சித்தனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இவ்வளவு பிரச்சனை பஞ்சாயத்து நடந்த பிறகும் கூட ஏன் தங்கமயிலோ அல்லது அவரது அம்மா பாக்கியமோ ஏன் நகை மேட்டர் பற்றி வாயவே திறக்கவில்லை. உண்மையாகவே திருந்தியவர்களாக இருந்தால் சரவணனிடமோ அல்லது பாண்டியனிடமோ நகை மேட்டரை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் சொல்லவில்லை. இதே போன்று தான் ராஜீ மற்றும் மீனா இருவரும் இந்த நகை மேட்டர் பற்றி தெரிந்தும் சொல்லவில்லை. அதாவது குழலிக்கு இத்தனை சவரன் நகை போட்டு நாங்கள் கட்டிக் கொடுத்தோம் என்று பாண்டியன் சொல்ல, அதை விட கூடுதலாகவே என்னுடைய மகளுக்கு நாங்கள் போடுவோம் என்று பாக்கியம் தான் வாயக்கொடுத்தார்.
பாண்டியனோ அவரது குடும்பத்தினரோ யாரும் வரதட்சணையாக ஒரு குண்டுமனி கூட கேட்கவில்லை. இந்த நிலையில் தான் தங்கமயிலுக்கு 80 சவரன் நகை போடுவதாக சொன்ன பாக்கியம் அவருக்கு வெறும் 8 சவரன் நகை மட்டுமே தங்கமாக போட்டுவிட்டு மீதமுள்ள 72 சவரன் நகைகள் அனைத்தையும் கவரிங்காக போட்டுள்ளார். இது எப்படியோ மீனா மற்றும் ராஜீக்கு தெரிந்துவிட்டது. இதைப் பற்றி இப்போது பஞ்சாயத்து வரும் போது தான் ராஜீ கதிரிடம் கூறியிருக்கிறார்.
அதன் பிறகு இந்த நகை மேட்டர் பற்றி இவர்கள் மூவரும் வேறு யாரிடமும் கூறவில்லை. சரவணன் கூறியது போன்று வேலை விஷயத்தில் மட்டும் தான் பொய் சொன்னேன் என்றார், அதன் பிறகு படிப்பு விஷயத்தில் மட்டும் பொய் சொன்னேன் என்றார், அடுத்து வயது வித்தியாசத்தில் மட்டும் பொய் சொன்னேன் என்று தங்கமயில் சொன்னதாக சொல்லி இன்னும் எத்தனை பொய் தான் சொல்லியிருக்கிறாள் என்று தெரியவில்லை அப்பா என்று புலம்பினார்.
ஒருவேளை பாக்கியம் போலீசில் புகார் கொடுக்கும் போது நகை மேட்டர் வெளிச்சத்திற்கு வருமா? அல்லது சரவணனே தானாக இந்த நகை மேட்டரை தெரிந்து கொள்வாரா? அப்படியில்லை என்றால் நகை மேட்டர் அப்படியே மண்ணுக்குள் புதைந்துவிடுமா என்பது போன்ற பல கேள்விகளுடன் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்று பார்த்து தெரிந்து கொள்வோம்.