ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!

Published : Dec 16, 2025, 04:20 PM IST

Bakiyam Revenge Against Pandian Family Drama Twitst : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 664ஆவது எபிசோடில் இன்னும் 2 நாட்களில் பாண்டியன் குடும்பத்தில் எப்படியாவது உன்னை வாழ வைப்பேன் என்று தங்கமயிலின் அம்மா பாக்கியம் சபதம் எடுத்துள்ளார்.

PREV
15
Vijay TV Pandian Stores 2, Pandian Stores 2 Serial Today Episode

பொய் சொல்லி நேர்மையாக வாழ்ந்து வரும் குடும்பத்தை ஏமாற்றினால் என்ன நடக்கும் என்பதற்கு தங்கமயிலின் குடும்பம் தான் உதாரணம். படிப்பு விஷயம், வேலை, வயசு என்று எல்லாவற்றிலும் பொய் சொல்லிய தங்கமயில் கடைசியாக எல்லா உண்மையும் தெரிந்த போது கூட நகை விஷயத்தை பற்றி வாய் திறக்கவில்லை. இதன் மூலமாக அவர் உண்மையில் திருந்தவில்லை என்பது தெளிவாகிறது. மீண்டும் அவரை குடும்பத்திற்குள் அனுமதித்தால் பாண்டியன் குடும்பம் தான் பாதிக்கப்படும். சரவணனுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதையெல்லாம் தெளிவாக விசாரித்து ஒரு பிளானோடு தான் பாண்டியன் குடும்பத்தில் தங்கமயில் வாக்கப்பட்டிருக்கிறார்.

25
Pandian Stores 2 Serial News

இப்போது வாழாவெட்டியாக தனது வீட்டிற்கு வந்துள்ளார். அம்மா, அப்பா தான் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றால் நாம் அப்படி இருக்க கூடாது என்பது கூடவா ஒரு பெண்ணுக்கு தெரியாது. இப்போ என்னாச்சு பாத்தீங்களா? கடந்த வாரம் வரையில் வீட்டிற்குள் எல்லோரது காலிலும் விழுந்து மாணிக்கம் கெஞ்சிய நிலையில் வீட்டிற்கு வெளியில் பாக்கியம் நாடகமாடினார். என்ன காரணம் என்று தெரியவில்லை. தனது மகளை கொடுமைப்படுத்தி அடித்து துரத்திவிட்டார்கள் என்று கூறி நாடகமாடினார். அப்போது ஊர்க்காரர்கள் எல்லாம் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து குழலி எல்லா உண்மைகளையும் சொல்லவே இப்படியெல்லாம் பொய் சொல்வாங்களா என்று அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

35
Pandian Stores 2 Full Story,

சரவணன் மற்றும் தங்கமயில் பிரச்சனையில் வீணாக மூக்கை நுழைத்து கடைசியில் பாண்டியனிடம் மிதி வாங்கியது தான் மிச்சம். இந்த சூழலில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 664ஆவது எபிசோடில் லக்கேஜை எடுத்துக் கொண்டு அப்படியே பொடி நடையாக பாக்கியம், மாணிக்கம் மற்றும் தங்கமயில் மூவரும் தங்களது வீட்டிற்கு வருகின்றனர். தன்னோட வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று அழுது கதறுகிறார். இப்போது அழுது கதறி என்ன பிரயோஜனம் இருக்கிறது. ஆனால், பாக்கியம் மற்றும் மாணிக்கத்திற்கு வீட்டில் தங்கை ஒருத்தி இருக்கிறாளே, அக்காக்காரி இப்படி வாழாவெட்டியாக வந்துவிட்டால் அவளுக்கு எப்படி திருமணம் நடக்கும் என்ற ஒரு சந்தேகம் தான்.

45
Saravanan Thangamayil Twist

ஆனால், பாக்கியம் நான் லேசுப்பட்ட ஆள் கிடையாது. இந்த ஊரே நம்மை எப்படி பேசியது. மயிலுக்கு எப்படி கல்யாணம் நடக்கும் என்று கேட்டார்கள். ஆனால், ஊரே பேசும் அளவிற்கு மயில் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி கொடுத்திருக்கிறேன். அதை நடத்திக் கொடுத்த எனக்கு தங்கமயிலை திரும்பவும் அவர்களது வீட்டில் வாழ வைக்க தெரியாதா? இன்னும் 2 நாட்களில் மயிலை அவர்களது வீட்டில் வாழ வைக்கிறேனா இல்லையா என்று பாருங்கள். அவர்களே நாங்கள் செய்தது தவறு என்று கூறி தங்கமயிலை மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறி சபதம் எடுத்தார்.

55
Pandian Stores 2 Latest Highlights

கடைசியாக தங்கமயில் மற்றும் அவரது சகோதரி மல்லி இருவரும் திருமணத்தை பற்றி பேசிக் கொண்டனர். எனக்கு மேரேஜ் பண்றதை நினைத்தாலே பயமாக இருக்கிறது. எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்றார். அதற்கு தங்கமயில் கல்யாணம் பண்ணுவதாக இருந்தால் இவர்கள் பேச்சை மட்டும் கேட்கவே கேட்காதே. அதோடு, பொய் சொல்லியும் திருமணமும் செய்யாதே. உண்மையை சொல்லிவிடு என்று சகோதரிக்கு தங்கமயில் அட்வைஸ் செய்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 664ஆவது எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories