அடுத்தடுத்து 3 முக்கிய சீரியல்களை இழுத்து மூடும் சன் டிவி... அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published : Apr 28, 2026, 08:52 AM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மூன்று மெகா சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளன. அதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். அந்த சீரியல்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
15
Sun TV Ended 3 Mega Serials

சின்னத்திரையில் சீரியல்களை அதிகளவில் ஒளிபரப்பும் சேனல் என்றால் அது சன் டிவி தான். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக பல்வேறு தொடர்களை ஒளிபரப்பு வரும் சன் டிவி இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணம் சீரியல்கள் தான். காலையில் தொடங்கி இரவு வரை தொடர்ச்சியாக சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒவ்வொரு சீரியலும் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருவதால் அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சீரியல்களுக்கு அதிகரித்த வரும் ஹவுஸ் காரணமாக தற்போது சில தொடர்களை வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பி வருகிறார்கள்.

25
முடிவுக்கு வரும் 3 சீரியல்கள்

சீரியல்களின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது அதற்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் தான். அந்த வகையில் கம்மியான டிஆர்பி ரேட்டிங் வாங்கும் சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள். அப்படி தற்போது ஒரே நேரத்தில் மூன்று மதிய நேர சீரியல்களை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்கள். அந்த மூன்று சீரியல்கள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் சரியான டைமிங்ஸ் ஸ்லாட் கிடைக்காததால் அதற்கு கம்மியான அளவு டிஆர்பி ரேட்டிங் கிடைத்தது. இந்த மூன்று சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் அதற்கு பதிலாக மூன்று புத்தம் புதிய தொடர்களை சன் டிவி களம் இறக்க உள்ளதாம்.

35
புனிதா சீரியல்

சன் டிவியில் முடிவுக்கு வரவுள்ள சீரியல்களில் புனிதா சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கியதிலிருந்து மதிய நேர ஸ்லாட்டில் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 450 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு டிஆர்பி ரேட்டிங்கை பெறாததால் அதனை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்கள். மே மாதத்துடன் புனிதா சீரியல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் நிமேஷிகா, அம்மு ராமச்சந்திரன், கார்த்திக் வாசுதேவன், கபிலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர்.

45
மணமகளே வா

அதேபோல் சன் டிவி இழுத்து மூட உள்ள மற்றொரு சீரியல் மணமகளே வா. இந்த சீரியல் 500 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. தினந்தோறும் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வந்த மணமகளே வா சீரியல் குறைந்த அளவிலான டிஆர்பி ரேட்டிங் பெற்றதால் அதற்கும் மூடுவிழா நடத்த உள்ளனர். மணமகளே வா சீரியலும் மே மாதத்துடன் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த சீரியலில் ஹரிக்கா சாது லோகேஷ் பாஸ்கரன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். நல்ல கதை களத்துடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலும் முடிவுக்கு வர உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

55
ஆடுகளம் சீரியல்

சன் டிவியில் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வந்த ஆடுகளம் சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதிய நேரத்திற்கு மாற்றப்பட்டது. அதுவே அந்த சீரியலுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. மதிய நேரத்துக்கு மாற்றிய பின்னர் ஆடுகளம் சீரியலின் டிஆர்பி மடமடவென குறைய தொடங்கியது. இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அந்த சீரியல் தற்போது மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்கிறார். அந்த சீரியலையும் வருகிற ஜூன் மாதத்தில் முடிவுக்கு கொண்டு வருகிறது சன் டிவி. அடுத்தடுத்து மூன்று மெகா சீரியல் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories