எட்டப்பன் வேலை பார்த்த சுகன்யா: தங்கமயிலுக்கு நடந்ததை எதிர்வீட்டில் சொல்லிட்டாரு; இவரை வீட்டுக்குள் விடலாமா?

Published : Aug 19, 2025, 03:33 PM IST

Sukanya revealed what happened to Thangamayil in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 563ஆவது எபிசோடில் தங்கமயிலுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சுகன்யா எதிர்வீட்டில் போட்டுக் கொடுத்துள்ளார்.

PREV
14
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய 563ஆவது எபிசோடு

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 563ஆவது எபிசோடில் தங்கமயில் கர்ப்பம் இல்லை என்பது அறிந்து குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒருவர் மாற்றி ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் சரவணனுக்கு பாண்டியன் ஆறுதல் கூறினார். மேலும் தங்கமயிலுக்கும் ஆறுதல் சொன்னார். இதற்கிடையில் தங்கமயிலுக்கான கர்ப்பத்தின் செலிபிரேஷன் போது வீட்டில் பலூன் கட்டுவதற்கு, வீட்டை அலங்கரிப்பதற்கு உதவியாக இருந்த சுகன்யா இன்று எதிரிவீட்டிலிருக்கும் சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.

24
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்,

ஏற்கனவே எதிர்வீட்டிற்கு செல்லக் கூடாது என்று பழனிவேல் கண்டிஷன் போட்டிருக்கும் நிலையில் இப்போது தான் கொஞ்ச நாட்களாக சுகன்யா எதிர்வீட்டிற்கு செல்லாமல் இருந்தார். ஆனால், இப்போது அங்கு சென்று தனது வீட்டில் என்ன நடந்தது என்பது பற்றி எல்லாவற்றையும் போட்டுக் கொடுத்துள்ளார். உண்மையில் தங்கமயில் கர்ப்பமாக இருந்தாரா? அவருக்கு என்ன நடந்தது? மருத்துவர் என்ன சொன்னார் என்பது பற்றி எல்லாவற்றையும் வெளிப்படுத்தியுள்ளார்.

34
தங்கமயிலுக்கு என்ன நடந்தது? எதிர்வீட்டில் போட்டுக் கொடுத்த சுகன்யா

இதைக் கேட்ட மாரி என்ன வாந்தி, மயக்கம் என்று எதுவும் வரவில்லையா என்று கேட்க, அதெல்லாம் மயிலுக்கு வரவில்லை என்றார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த காந்திமதி சற்று வருத்தமாக இருந்தார். ஆரம்பத்திலேயே வடிவு எதிர்வீட்டில் நடப்பது பற்றி எதுவும் இங்கு சொல்லவேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால், அதையெல்லாம் கேட்டும் சுகன்யா அங்கு நடக்கும் எல்லா விசயங்கள் பற்றியும் இங்கு போட்டுக் கொடுத்துள்ளார்.

44
எதிர்வீட்டில் போட்டுக் கொடுத்த சுகன்யா

இது போன்று ஒருவரால் தான் பல குடும்பங்களில் சண்டை, சச்சரவுகள் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கிறது. சுகன்யா இங்கு வந்து சொன்ன விஷயம் பாண்டியன் குடும்பத்தாருக்கு இப்போது தெரியாது. ஒருவேளை இது பற்றி பாண்டியன் குடும்பத்தாருக்கு தெரிய வரும் போது மீண்டும் சுகன்யாவிற்கு எதிராக பிரச்சனைகள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories